Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    அனுமானின் மிகப்பெரிய கதாயுதம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-08-27
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :  அனுமானின் மிகப்பெரிய கதாயுதம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃ


    INTRO :  அனுமானின் மிகப்பெரிய கதாயுதம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ இலங்கையில் பூமியை தோண்டும் போது கிடைத்த 2 டன் எடையுள்ள கதை கிரேன் மூலம் டிரைலரில் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. இராமாயணம் வெறும் கதையல்ல.

    ஜெய் ஸ்ரீராம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 “ என இம் மாதம் 22 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (22.08.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    முதலில் நாம் இலங்கையில் பிரதான ஊடகங்களில் இவ்வாறான கதாயுதம் இலங்கையில் கிடைக்கப்பெற்றமைக்கான உத்தியோகப்பூர்வ செய்திகள்  வெளியாகி இருக்கிறதா என ஆய்வினை மேற்கொண்டபோது அது போன்று எவ்விதமான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கப்பெற்றவில்லை.

    மேலும், நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வுசெய்தபோது, இலங்கையில் கதாயுதம் கிடைத்தது என்ற தகவல் போலியானது என்பது தெரிந்தது. பலரும், இந்த கதாயுதம் தொடர்பான செய்தியைப் பகிர்ந்திருந்தனர். 2013 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இந்த கதாயுதம் நிறுவப்பட்டுள்ளது.

    A screenshot of a computer

Description automatically generated

    கூகுளில் சில Keywords பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டபோது, 11 வருடங்களுக்கு முன்னர் யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது. அதுவும் இந்தூர் பகுதியில் குறித்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக பதிவேற்றம் செய்யப்பட்ட நபர் பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

    இது தொடர்பில் எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அனுமானின் மிகப்பெரிய கதாயுதம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது, என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:அனுமானின் மிகப்பெரிய கதாயுதம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-08-27

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.