Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    மணிப்பூரில் பொலிஸாரை தாக்கும் நிர்வாணப் பெண் என பகிரும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-07-26
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :மணிப்பூரில் பொலிஸாரை தாக்கும் நிர்வாணப் பெண் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிற

    INTRO :

    மணிப்பூரில் பொலிஸாரை தாக்கும் நிர்வாணப் பெண் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “இந்த ஆபாச காட்சிகளை வெளியிட வேண்டாம் என்று தான் நினைதாதேன் ஆனால் இங்குள்ள காங்கிரஸ் திராவிட கட்சிகள் அரசியலாக்க பார்க்கின்றன மணிப்பூரில் நடைபெறும் காட்சிகள் தான் இது ஆனால் செய்திகளோ வெளியே என்னென்னவோ வருகின்றன உண்மை நிலையை மக்களுக்கு ஆதாரங்களோடு வெளியிட வேண்டும் “ என இம் மாதம் 23 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (23.07.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி அதனை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    குறித்த தேடலின் போது, இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது நிகழ்ந்த சம்பவம் என்று தெரியவந்தது.

    உத்தரப் பிரதேசத்தில் சண்டௌலி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது பொலிஸாருக்கும், திருநங்கைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மறு வாக்கு எண்ணிக்கை கோரி, திருநங்கைகள் சிலர் ஆடைகளைக் களைந்து ரகளையில் ஈடுபட்டனர்.

    அப்போது எடுக்கப்பட்ட குறித்த வீடியோவை தற்போது மணிப்பூர் நிகழ்வுடன் தொடர்பு படுத்தி, மணிப்பூரில் பொலிஸாருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டு வதந்திகள் பரப்பியுள்ளனர்.

    indiatimes

    <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/SIZKuoLBIMk” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” allowfullscreen></iframe>

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி மணிப்பூரில் பொலிஸாரை தாக்கும் நிர்வாணப் பெண் என பகிரப்படும் வீடியோ உத்திரப் பிரதேசத்தில் நிகழ்ந்த சம்பவம் என கண்டறியப்பட்டது. 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok 

    எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:மணிப்பூரில் பொலிஸாரை தாக்கும் நிர்வாணப் பெண் என பகிரும் வீடியோ உண்மையா?

    Written By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-07-26

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.