Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இணையத்தில் வைரலாகும் முத்தையா முரளிதரன் நடனம் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-08-08
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :முத்தையா முரளிதரன் இந்தி பாடலுக்கு நடனமாடும் விதமாக ஒரு வீடியோ தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸ

    INTRO :
    முத்தையா முரளிதரன் இந்தி பாடலுக்கு நடனமாடும் விதமாக ஒரு வீடியோ தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ முரளிதரன் vibing to tauba tauba 😂 “ என இம் மாதம் 04 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (04.07.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    முதலில் நாம் குறித்த வீடியோவை  Invid-WeVerify என்ற இணைய Tool பயன்படுத்தி Reverse Image மூலம் ஆய்வினை மேற்கொண்டபோது, குறித்த காணொளியில் இருக்கும் நபர் இந்திய நடன இயக்குனரான கிரண் ஜோபால் Tauba Tauba என்ற இந்திய பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    முரளிதரனை போன்ற ஒத்த உருவத்தில் Kiran Jopale இருப்பதால், இது முரளிதரன் என்று நினைத்து பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை எம்மால் காணக்கிடைத்தது.

    மேலும், Kiran Jopale அவர்களின் உத்தியோகப்பூர்வ யூடியுப் தளத்திலும் குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    இது முரளிதரன் இல்லை; Kiran Jopale என இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெற்றன.

    Link | Archived Link

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இணையத்தில் வைரலாகும் முரளியின் நடனம் என இணையத்தில் வைரலாகும் வீடியோ தகவல் தவறானது, என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இணையத்தில் வைரலாகும் முத்தையா முரளிதரன் நடனம் உண்மையா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-08-08

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.