Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    <strong>பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இஸ்லாத்தை ஏற்றாரா?</strong>

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-03-09
    1 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக ஒரு  புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக

    INTRO :
    பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக ஒரு  புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். முஹம்மது சாணக்கியன் என அவர் பெயர் மாற்றிக்கொண்டார் “ என கடந்த மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (25.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி ஆய்வு செய்த போது, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த வருடம் AR-RABBANIYYA-CANADA சார்பாக கனடாவின் ஸ்காபரோ நகரில் சாணக்கியனை சந்தித்த போது எடுத்த புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    இது தொடர்பாக பேஸ்புக்கில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி (29.08.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    <iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fnanungal.nilal%2Fposts%2Fpfbid036BDnsKbXzVkRDo9cmYrzfeA434g8u1DtdVZYcjAD1WeWb9vcqsN9yyVosYx3EKnpl&show_text=true&width=500″ width=”500″ height=”831″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

    Facebook Link | Archived Link

    மேலும் இது தொடர்பாக தகவலை உறுதி செய்வதற்கு நாம் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் செயலாளரை தொடர்புக்கொண்டு வினவிய போது, இது முற்றாக போலியான தகவல் என்றும் இது அரசியல் பழிவாங்கல் நிகழ்வு எனவும் எமக்கு தெரிவித்திருந்தார்.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இஸ்லாத்தை ஏற்றார் என்று பகிரப்படும் புகைப்படம் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இஸ்லாத்தை ஏற்றாரா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-03-09

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.