Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    உலகக் கிண்ண கால்பந்து தொடக்க விழாவில் சிறுவர்கள் குரான் ஓதும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-11-30
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :உலகக் கிண்ண கால்பந்து தொடக்க விழாவில் சிறுவர்கள் குரான் ஓதும் வீடியோ  என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானத

    INTRO :
    உலகக் கிண்ண கால்பந்து தொடக்க விழாவில் சிறுவர்கள் குரான் ஓதும் வீடியோ  என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” கட்டார் FIFA 2022 இன் அங்குரார்ப்பன ஒத்திகை நிகழ்வுகளில் நடந்த மிகவும் அருமையான காட்சி …

    சிறார்களை கொண்டு அல்குர்ஆன் ஓதும் அழகான காட்சி !

    இஸ்லாத்தின் விழுமியங்களை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடாது அதற்கு உரிய அந்தஸ்துகளை வழங்கி இஸ்லாத்தை மேம்படுத்துவதற்காக இந்த 20222 உலக கோப்பை போட்டியை கட்டார் பயன்படுத்தி இருக்கிறது .

    இஸ்லாத்தின் முக்கிய பல சட்ட திட்டங்களுக்கும் அதன் சவால்களுக்கு முகம் கொடுத்து கொண்டுதான் இந்த பீபா (FIFA )உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துகிறது .அந்த வகையிலே கட்டாரை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும் .

    கட்டாரின் வீதி எங்கும் நபிமொழிகளும் அல்குர்ஆன் வசனங்களும் சொரிந்து சொரிந்து காணப்பட்டு இஸ்லாத்தை அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களில் மிகவும் அழகாக அதான் சொல்லும் இமாம்களை நியமித்து இருக்கிறார்கள். பல மியூசியங்கள் திறக்கப்பட்டிருக்கிறது இவை அனைத்தும் கட்டார் விளையாட்டு மூலமாக இஸ்லாத்தைத் விளங்கப்படுத்துவதற்கான முயற்சியையும் எடுத்து இருக்கிறது என்பது பாராட்டத்தக்க விடயம் .

    அந்த வகையில் வேறு முஸ்லிம் நாடுகளோடு ஓப்பிடுகின்றபொழுது  கட்டார் ஒரு படி மேலே சென்று இருக்கிறது ! அதற்கு நாம் நன்றி கூறுகிறோம்! 

     “ என இம் மாதம் 20 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (20.11.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.


    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த வீடியோவை நன்கு அவதானித்த போது , உலகக் கிண்ண நடைபெற உள்ள மைதானத்தின் தொடக்க விழா என குறிப்பிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    அதில் அவ்வாறு குறிப்பிட்டுள்ள நிலையில், எதனடிப்படையில் குறித்த வீடியோ உலகக்கிண்ண கால்பந்து ஆரம்ப நிகழ்வின் போது எடுக்கப்பட்டது என பகிரப்படுவது எமக்கு புரியவில்லை.

    நாம் குறித்த வீடியோவில் சில காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2021 ஆம் ஆண்டு யூடியூபில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்காக புதிதாகக் கட்டப்பட்ட அல் துமாமா (Al Thumama) மைதானத்தின் தொடக்க விழா என்று குறிப்பிட்டு பதிவேற்றம் செய்துள்ளமை எம்மால் காணக்கிடைத்தது.

    நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் doha news என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, doha news Al Thumama  inauguration என கூகுளில் தேடினோம். அப்போது doha news  2021 அக்டோபர் 24 ஆம் திகதி அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட உண்மையான வீடியோ கிடைத்தது. அதில் அல் துமாமா மைதானம் தொடக்க விழா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கமைய உலகக் கிண்ண கால்பந்து தொடக்க விழாவில் சிறுவர்கள் குரான் ஓதும் வீடியோ என பரவி வருகின்ற குறித்த வீடியோ அல் துமாமா மைதானம் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவு மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:உலகக் கிண்ண கால்பந்து தொடக்க விழாவில் சிறுவர்கள் குரான் ஓதும் வீடியோ உண்மையா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-11-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.