Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    சஜித் பிரேமதாச முஸ்லிம்களுக்கு நபி போன்றவர் என ரவூப் ஹக்கீம் தெரிவித்தாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-08-11
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாச குறித்து ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்து என விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகிய தகவல் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்ட


    INTRO :
    ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாச குறித்து ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்து என விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகிய தகவல் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ இந்த நாய்க்கு அடிங்கடா செருப்பால் : மக்கள் கருத்து

    Mother Country’s News

    தாய் நாட்டின் செய்தி “ என இம் மாதம் 08 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (08.08.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    முதலில் நாம் விடிவெள்ளி பத்திரிகையின் தலைமை ஆசிரியரை தொடர்புக்கொண்டு வினவியபோது, இது முற்றிலும் போலியானது தகவல் என்றும் இவ்வாறான செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என தெரிவித்தார்.

    மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இணையத்தில் பரவுகின்ற செய்தி சிலரினால் பரப்பப்பட்டு வந்தாலும், தற்போது ஜனாதிபதி தேர்தல் களத்தில் சஜித் பிரேமதாசவுடன் ரவூப் ஹக்கிம் இணைத்துள்ள நிலையில் மீண்டும் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகின்றதாக எமக்கு அறியத்தந்தார்.

    A newspaper with a few images

Description automatically generated with medium confidence

    அத்தோடு அவர்களில் பத்திரிகை கொரோனா காலத்திற்கு பின்னர் வார இதழ் மாத்திரம் வெளியிடப்படுவதாகவும், குறித்த பத்திரிகையின் முன்பக்க இலட்சினை மற்றும் வடிவமைப்பு சிவப்பு நிறத்தினால் காணப்படும் என உறுதி செய்தார்.

    மேலும், 2020 ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் இடைநிறுத்தப்பட்ட விடிவெள்ளி நாளாந்த பத்திரிகை வடிவமைப்பினை நாம் ஆய்வு செய்தபோது, பத்திரிகையின் முன்பக்க வடிவமைப்பு முற்றிலும் வேறுப்பட்டிருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.

    நமது ஆய்விற்கு அமைய விடிவெள்ளி பத்திரிகையின் நாளாந்த பத்திரிகையின் இலட்சினையினை எடுத்து ரவூப் ஹக்கிம் மற்றும் சஜித் பிரேமதாச தொடர்பாக தெரிவித்த கருத்து என எடிட் செய்து பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சஜித் பிரேமதாச முஸ்லிம்களுக்கு நபி போன்றவர் என ரவூப் ஹக்கீம் என பரவும் தகவல் தவறானது, என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:சஜித் பிரேமதாச முஸ்லிம்களுக்கு நபி போன்றவர் என ரவூப் ஹக்கீம் தெரிவித்தாரா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-08-11

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.