Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    இலங்கை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ; உண்மையில் என்ன நடந்தது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-07-15
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்ட

    INTRO :

    இலங்கைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “இலங்கை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

    #Rajini’s Latest Still 🔥👌🔥 #Rajini #Kaavaalaa #JailerFromAug10th #Thalaivar170 #Superstar #Rajinikanth “ என இம் மாதம் 14 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (14.07.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இதுதொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    முதலில் குறித்த புகைப்படத்தில் கீழ் பதிவிட்ட கமெண்டுக்களை நாம் பார்த்த போது, இலங்கைக்கு உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜயம் மேற்கொண்டுள்ளதாக ரசிகர்கள் கருதி வாழ்த்து தெரிவித்திருந்தமையும், சிலர் இது போலியானது என கமெண்ட் செய்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    நாம் இது குறித்து மேற்கொண்ட ஆய்வின் போது, சென்னையிலிருந்து மாலைத்தீவுக்கு செல்லும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த அவர், குறித்த விமானம் இலங்கை ஊடாக செல்லும் நிலையில், இலங்கை விமான நிலையத்தில் ஒரு சில மணித்தியாலங்கள் தங்க நேரிட்டுள்ளது. 

    இது குறித்தான பதிவினை ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    அதற்கமைய மாலைத்தீவிற்கான பயணத்தின் போது சில மணித்தியாலங்கள் இலங்கை விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கழித்துள்ளமையினை இலங்கைக்கு வந்ததாக குறித்த பதிவில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் குழப்பநிலையினை தோற்றுவித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, இலங்கை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பரவும் தகவலில் இலங்கையின் ஊடாக மாலைத்தீவிற்கு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் பயணித்த போது இலங்கையில் சில மணித்தியாலங்கள் கழித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இலங்கை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ; உண்மையில் என்ன நடந்தது?

    Written By: S.G.Prabu 

    Result: Missing Context

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-07-15

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.