Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    <strong>துணிவை துரத்தி அடித்த விஜய் என தந்தி டிவி செய்தி வெளியிட்டதா ?</strong>

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-01-27
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :துணிவை துரத்தி அடித்த விஜய் என தந்தி டிவியின் நியூஸ் கார்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்

    INTRO :
    துணிவை துரத்தி அடித்த விஜய் என தந்தி டிவியின் நியூஸ் கார்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” துணிவை துரத்தி அடித்த விஜய்…

    பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது

    இந்நிலையில் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகும் நிலையில் அனைத்து இடங்களிலும் வாரிசு தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, தொடர்ந்து வாரிசு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது,இந்த பொங்கல் ரேசில் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. “ என இம் மாதம் 18 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (18.01.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இந்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் திரைக்கு வந்தன. அதில் இருந்து இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் எந்த படம் அதிக வசூல் என்ற போட்டி ஆரம்பமானது.


    எமது இந்திய தமிழ் பிரிவு இது தொடர்பாக தந்தி டி.வி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு குறித்த நியூஸ் கார்டை அனுப்பி வினவிய போது, குறித்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார்

    நாம் தந்தி டிவி பேஸ்புக் பக்கத்தில் கடந்த 17 ஆம் திகதியன்று இது போன்ற செய்தி கார்டு வெளியிட்டுள்ளனரா என ஆய்வினை மேற்கொண்ட போது அது போன்ற எந்த பதிவும் எமக்கு கிடைக்கவில்லை. குறித்த தேடலின் போது விஜயின் வாரிசு தொடர்பாக 16 ஆம் திகதியும் (16.01.2023) மற்றும் 18 ஆம் திகதியும் (18.01.2023) தான் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. 

    16.01.2023

    18.01.2023

    இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், துணிவை துரத்தி அடித்த விஜய் என தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக பகிரப்படும் புகைப்படம் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:துணிவை துரத்தி அடித்த விஜய் என தந்தி டிவி செய்தி வெளியிட்டதா ?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-01-27

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.