Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    பிஃருஹா (பைரஹா) தோட்டத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுக்கிறதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-05-04
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :பிஃருஹா (பைரஹா) தோட்டத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுக்கிறது என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது

    INTRO :
    பிஃருஹா (பைரஹா) தோட்டத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுக்கிறது என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ மதீனா முனவ்வறா, மஸ்ஜிதுந் நபவிய்யில்  #பிஃருஹா (பைரஹா) தோட்டம், அதில் ஒரு கிணறு  இருந்தது. தற்போது அவ் இடத்தில் இருந்து தண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்துள்ளது…  ஸுப்ஹானல்லாஹ்!

    இத்தோட்டம் அபுதல்ஹா றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சொந்தமாக இருந்தது.  “லன் தனாலுல் பிர்ர ஹத்தா துன்பிகூ மிம்மா துஹிப்பூன்” 

    -‘நீங்கள் விரும்பியதை அல்லாஹ்வுக்காக தர்மம் செய்யாதவரை  நன்மையை அடைந்துகொள்ள முடியாது’  என்ற வசனம் இறங்கிய போது இத்தோட்டத்தை தர்மம் செய்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அக் கிணற்றின் தண்ணீரை விரும்பி குடித்துவந்தார்கள்.

    Thanks WhatsApp “ என கடந்த மாதம் 30 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (30.04.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    குறித்த தேடலின் போது, அதிக மழை காரணமாக மசூதிக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாக bolnews என்ற டிக்டொக் கணக்கில் குறித்த வீடியோவினை வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    மேலும் நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, எக்ஸ் தளத்தில் நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலில் வெள்ளப்பெருக்கு என பதிவிட்டு வெளியிட்டிருந்த மேலும் சில காட்சிகள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

    அத்துடன் elmostaqbal.com என்ற இணையத்தில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட உண்மை பரிசோதனை ஆய்வும் எமக்கு கிடைக்கப்பெற்றது. அதில் இது வெள்ளப்பெருக்கினால் பள்ளிவாசலுக்குள் தண்ணீர் வந்த காட்சி என செய்தி வெளியிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பிஃருஹா (பைரஹா) தோட்டத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுக்கிறது என பரவும் வீடியோ தவறானது என கண்டறியப்பட்டுள்ளது

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பிஃருஹா (பைரஹா) தோட்டத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுக்கிறதா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-05-04

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.