Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    டைட்டன் நீர்முழ்கி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு என பகிரும் புகைப்படங்கள் உண்மையா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-06-28
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :டைட்டன் நீர்முழ்கி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது

    INTRO :

    டைட்டன் நீர்முழ்கி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “🇺🇸டைட்டன் நீர்மூழ்கி கப்பலுக்கு என்ன நடந்தது? கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!!!

    👉 To Read The News :- https://trueceylon.lk/a-debris-field-has-been-discovered…/

    💁‍♂️ To join our WhatsApp group :- https://chat.whatsapp.com/F9r1DOCeOiz6gY4LWHca9h

    💁‍♂️ FACEBOOK :- https://www.facebook.com/trueceylon

    💁‍♂️To join our Telegram group :- https://t.me/joinchat/HHhCiN5Fge8g9g_A “ என இம் மாதம் 23 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (23.06.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக முதலில் நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது,இது 2004 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    குறித்த புகைப்படங்கள் Alamy stock photos இணையத்தளத்தில் விற்பனைக்கு இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதில் இது டைட்டானிக் கப்பல் விபத்தில் மரணித்தவர்களுடையதாக கருதப்படுகின்றது.

    Alamy | Archived

    alamy.com

    மேலும் இது தொடர்பாக எமது குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் போது, சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் குறித்த டைட்டன் நீர்முழ்கி கப்பலின் ஐந்து பாகங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது.

    independent | yorkpress | sky.com

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, டைட்டன் நீர்முழ்கி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு என பகிரும் புகைப்படங்கள் என பரவும் புகைப்படங்கள் போலியானது என்பது உறுதியாகின்றது. 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:டைட்டன் நீர்முழ்கி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு என பகிரும் புகைப்படங்கள் உண்மையா ?

    Written By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-06-28

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.