Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    verite research நிறுவனம் வெளியிட்ட தேர்தல் எதிர்வு கூறல் அறிக்கையா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-12-20
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : verite research நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட எதிர்வு கூறல் அறிக்கை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியா

    INTRO :

    verite research நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட எதிர்வு கூறல் அறிக்கை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “ ஏப்ரலில் தேர்தல் நடத்தப்பட்டால், இந்த முடிவு தேசிய மக்கள் சக்திக்கு மேலும் மேலும் எம்.பி.க்களாக மாறும்.

    ரணில்ராஜபக்ஷா, என்ன சொல்றீங்க, கையை எரிக்கறதுக்கு சீக்கிரம் சண்டேக்கு போறோம்

    #ரணில்ராஜபக்ஷ #SLPolitics #lka “ என இம் மாதம் 18 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (18.12.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)


    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    Verité Research  நிறுவனத்தினால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டதாக எந்தவொரு பிரதான ஊடகங்களிலும் செய்தி வெளியாகவில்லை. 

    மேலும் இது தொடர்பாக அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினை நாம் ஆய்வு செய்தபோது அவ்வாறான எந்த அறிக்கையும் அவர்களினால் வெளியிடப்பட்டிருக்கவில்லை. 

    அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த இணையத்தில் பரவிவருகின்ற ஆய்வறிக்கை போலியானது எனவும், அவ்வாறான எவ்விதமான ஆய்வினையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை எனவும் பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

    <iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FVeriteResearch%2Fposts%2Fpfbid0kdfy3Pxuu2Awo8nDqnJHrgWC5kxZAurV1uSdFCxqB8dGmpyqz56k8dPYupcPz2V7l&show_text=true&width=500″ width=”500″ height=”738″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி verite research நிறுவனம் வெளியிட்ட தேர்தல் எதிர்வு கூறல் அறிக்கை என பகிரப்படும் தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எமது ஆங்கல பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:verite research நிறுவனம் வெளியிட்ட தேர்தல் எதிர்வு கூறல் அறிக்கையா இது?

    Written By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-12-20

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.