Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    விராட் கோலி உருவத்தினை மணலில் செய்த சிறுவன் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-04-11
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :விராட் கோலியின் உருவத்தினை மணலில் செய்த சிறுவன் என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்

    INTRO :
    விராட் கோலியின் உருவத்தினை மணலில் செய்த சிறுவன் என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” விராட் கோஹ்லியின் சிலை செய்த குழந்தையின் அழகிய கலை படைப்பு ❤️

    #viratkohli 

    #bestphotochallenge… See more “ என இம் மாதம் 02 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (02.04.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டோம். குறித்த தேடலின் போது இது போன்ற அழகிய வடிவமைப்பினை யாரும் மேற்கொண்டதாக செய்திகள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து குறித்த புகைப்படம், செயற்கை நுண்ணறிவினை  (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழ நாம் அதனை செயற்கை நுண்ணறிவு (AI) பரிசோனை கருவியில் உட்செலுத்தி ஆய்வு செய்தோம்.

    இணையத்தில் பரவி வருகின்ற புகைப்படம், ரமேஷ் யாதவ் என்ற நபரினால் முதல் முதலில் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. குறித்த நபரின் கணக்கானது டிஜிட்டல் கிரியேட்டர் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளதோடு, குறித்த புகைப்படத்திற்கு “Photo Editing Challege” என்ற ஹேஷ்டேக்கினை பயன்படுத்தியுள்ளமை இந்திய உண்மை சரிபார்க்கும் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், விராட் கோலியின் உருவத்தினை மணலில் செய்த சிறுவன் என பரவும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக, கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:விராட் கோலி உருவத்தினை மணலில் செய்த சிறுவன் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Partly False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-04-11

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.