Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இந்தியா கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வியாஸ்காந்த் அணியில் இணைக்கப்பட்டாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-12-31
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இந்தியா கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கை அணியில் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த த

    INTRO :
    இந்தியா கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கை அணியில் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் ” இலங்கை கிரிக்கெட் அணிக்குள் விஜயகாந் வியாஸ்காந்

    2023 இலங்கை, இந்தியா கிரிக்கெட் சுற்றுப்போட்டியில்

    இலங்கை கிரிக்கெட் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் விளையாடுவார் “ என இம் மாதம் 25 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (25.12.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    Facebook Link | Archived Link

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    எமது குழுவினர் இது தொடர்பாக உண்மை தன்மையினை கண்டறிவதற்கு மேற்கொண்ட ஆய்வின் போது, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 20 பேர் கொண்ட அணியினை இலங்கை கிரிக்கெட் சபை கடந்த 28 ஆம் திகதி வெளியிட்டது.

    20 பேர் கொண்ட இலங்கை அணி


    1. தசுன் ஷானக – அணித்தலைவர்

    2. பெத்தும் நிஸ்ஸங்க

    3. அவிஷ்க பெர்னாண்டோ

    4. சதீர சமரவிக்ரம

    5. குசல் மெண்டிஸ் (ஒருநாள் போட்டிகளுக்கான உப தலைவர்)

    6. பானுக ராஜபக்ஷ (T20I போட்டிகளுக்கு மாத்திரம்) 

    7. சரித் அசலங்க 

    8. தனன்ஜய டி சில்வா 

    9. வனிந்து ஹஸரங்க (T20I போட்டிகளுக்கான உப தலைவர்)

    10. அஷேன் பண்டார

    11. மஹீஷ் தீக்ஷன

    12. ஜெப்ரி வெண்டர்சே (ஒருநாள் போட்டிகளுக்கு மாத்திரம்)

    13. சாமிக்க கருணாரத்ன

    14. டில்ஷான் மதுசங்க 

    15. கசுன் ராஜித 

    16. நுவனிந்து பெர்னாண்டோ (ஒருநாள் போட்டிகளுக்கு மாத்திரம்)

    17. துனித் வெல்லாலகே

    18. பிரமோத் மதுசான்

    19. லஹிரு குமார 

    20. நுவான் துஷார (T20I போட்டிகளுக்கு மாத்திரம்).

    இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 போட்டிகளில் மேற்கண்ட இலங்கை அணி விளையாடவுள்ளது. Link 

    சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல வீரர்கள், உண்மையில், இந்திய சுற்றுப்பயணத்திற்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், அங்கு குறிப்பிடப்பட்ட சில வீரர்கள் இலங்கை அணியில் சேர்க்கப்படவில்லை. உதாரணமாக, சமூகவலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வீரர்களில் ஏஞ்சலோ மெத்யூஸ், பினுர பெர்னாண்டோ மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியில்   தேர்ந்தெடுக்கப்படவில்லை.

    இலங்கை நாட்டின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 அணிகளுக்கு தசுன் ஷானக அணித்தலைவராக செயற்படும் அதேவேளையில், 

    ஒருநாள் அணியின் புதிய உப தலைவராக குசல் மெண்டிஸும் இருபதுக்கு20 அணியின் உப தலைவராக வனிது ஹசரங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    விஜயகாந்த் வியாஸ்காந்த் BPL இல்

    இலங்கை கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்படாது போன Jaffna Kings அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணியான Chattogram Challengers சார்பாக 2023 BPLக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், என்று கண்டறியப்பட்டுள்ளது. Rewrite the sentence

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இந்தியா கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வியாஸ்காந்த் அணியில் இணைக்கப்பட்டாரா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Partly False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-12-31

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.