
INTRO :
WION நியூஸ் இஷாம் மரிக்கார் தொடர்பாக வெளியிட்ட செய்தி குறித்த நிறுவனம் நீக்கியுள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ இலங்கைக்கான இந்திய தூதுவரின் கருத்தினை மறுத்த ரிஷாத் பதியுதீன் பற்றி அடிக்கடி தகவல் வெளியிடும் இந்தியாவின் பிரபல ஊடகமான WION நியூஸ் இன்று வெளியிட்ட செய்தி சகோதரர் SM Isham Marikar பெயரை சுமந்திருந்தது.
அவசர அவசரமாக இந்த செய்தி நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தூய தேச இயக்கத்தின் தலைவன் இந்தியாவிலும் பேசப்படுகின்றான் என்பதை நினைக்கும் போது சந்தோசமாக இருக்கிறது. அரசியல் அதிகாரம் காரணமாக நீக்கப்பட்ட இந்த செய்தியை மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டியது நமது கடமையல்லவா #CleanGame #CleanGuy #CleanLeader #CleanNation #CleanPolitics #CleanShot “ என இம் மாதம் 23 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (23.07.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த வீடியோவில் நன்கு அவதானித்த போது, WION நியூஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் வீடியோவை போன்று இல்லாமையினால் குறித்த வீடியோ வேறு சிலரினால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எமக்கு எழுந்தது.
மேலும் குறித்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள பின்னணி குரல் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதை நாம் நன்கு செவிமடுக்கும் போது உணர முடிந்தது. அத்துடன் WION நியூஸ் நிறுவனத்தில் வெளியிடப்படுகின்ற வீடியோக்கள் சிலவற்றை நாம் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அதில் அவர்கள் இதுபோன்ற எவ்விதமான பின்னணி குரலினை பயன்படுத்தியதாக காணப்படவில்லை.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள எடிட் முறையும் அவர்களின் எடிட் முறையும் முற்றிலும் வேறுப்பட்டு காணப்பட்டது. பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துருக்கள் (fonts) மற்றும் அவர்கள் தங்களின் வீடியோவில் வலது பக்க மேல் ஓரத்தில் அவர்களின் இலச்சினை பயன்படுத்துவமில்லை என்பது நாம் மேற்கொண்ட ஆய்வுகளிள் தெளிவானது.
இதனை மேலும் உறுதி செய்யும் விதமாக நாம் WION நியூஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியினை தொடர்புகொண்டு வினவியபோது, இது முற்றிலும் தவறான தகவல் எனவும், இவ்வாறான வீடியோ WION நியூஸ் நிறுவனத்தினால் வெளியிடப்படவில்லை என்பதோடு, இது தமது நிறுவனத்தின் நாமத்திற்கும் களங்கம் விளைவிக்கும் என தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக அவரின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், WION நியூஸ் இஷாம் மரிக்கார் தொடர்பாக வெளியிட்ட செய்தி என பரவும் வீடியோ WION நியூஸ் நிறுவனத்தினால் வெளியிடப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:WION நியூஸ் இஷாம் மரிக்கார் தொடர்பாக வெளியிட்ட செய்தி என பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: S.G.PrabuResult: Misleading



