Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவிர்ப்பதே நீண்ட ஆயுளுக்கான சிறந்த வழி என  Allan Greenberg பெயரில் பரவும் தகவல் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-30
    8 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO “ஓய்வுபெற்ற மருத்துவர் என்ற முறையில் நான் உண்மையாகவே ஒன்றைச் சொல்ல முடியும். மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவிர்ப்பதே நீண்ட ஆயுளுக்கான சிறந்த வழி” எனக் கூறும் பதிவு ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வ

    Subscribe to our WhatsApp Channel

    INTRO

    “ஓய்வுபெற்ற மருத்துவர் என்ற முறையில் நான் உண்மையாகவே ஒன்றைச் சொல்ல முடியும். மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவிர்ப்பதே நீண்ட ஆயுளுக்கான சிறந்த வழி” எனக் கூறும் பதிவு ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

    எனவே இந்த கூற்று தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் ஓய்வுபெற்ற மருத்துவர் என்ற முறையில் நான் உண்மையாகவே ஒன்றைச் சொல்ல முடியும்:

    ஒருவேளை உங்களுக்கு ஒரு தீவிர விபத்து ஏற்பட்டால் ஒழிய, முதுமை வரை ஆரோக்கியமாக வாழ்வதற்கான சிறந்த வழி மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவிர்ப்பதே ஆகும். அதற்குப் பதிலாக, ஊட்டச்சத்து, மூலிகை மருத்துவம் மற்றும் பிற இயற்கை மருத்துவ முறைகளை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு ஒரு இயற்கை மருத்துவ நிபுணரின் (naturopathic physician) சேவை கிடைத்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏறக்குறைய அனைத்து மருந்துகளும் நச்சுத்தன்மை கொண்டவை; அவை நோயின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளனவே தவிர, ஒருவரை முழுமையாகக் குணப்படுத்துவதற்காக அல்ல.

    -டாக்டர் ஆலன் கிரீன்பெர்க், MD என குறிப்பிட்டு இந்த தகவல் பகிரப்பட்டிருந்தது.

    மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த கூற்று தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, இதே கூற்று இணையத்தில் பல ஆண்டுகளாகப் பகிரப்பட்டு வருகின்றமையை அறியமுடிந்தது. இந்த மேற்கோளின் ஆங்கில வடிவத்தை இணையத்தில் தேடியபோது, 2002ஆம் ஆண்டு முதல் இது இணையத்தில் காணப்படுகின்றது. 

    2002 டிசம்பர் 25ஆம் திகதி  வெளியிடப்பட்ட ஒரு பழைய இணையப் பதிவில், “Dr. Allan Greenberg” என்ற பெயரில் இதே நீண்ட கூற்று வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், கூற்று 2002 டிசம்பர் 24ஆம் திகதி வெளியிடப்பட்டதாக நேரக்குறிப்பும் உள்ளது.Link | Link | Link

    எனவே, இந்த கூற்றானது சமூக வலைத்தளங்களில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு கூற்று அல்ல என்பதுடன்  இதே உரை 2002ஆம் ஆண்டிலிருந்தே இணையத்தில் பரவி வருகின்றமையை அறிய முடிகின்றது.

    இந்தக் கூற்றின் மூல ஆதாரம் தெளிவாக இல்லை

    இந்த மேற்கோளைப் பற்றி 2015ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வு விவாதத்திலும், “Dr. Alan/Allan Greenberg” பெயரில் இந்தக் கூற்று பல மாற்று மருத்துவ இணையத்தளங்களில் தொடர்ந்து மறுபதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால் அந்த விவாதத்தில், மேற்கோளுக்கான மூல நேர்காணல், மருத்துவக் கட்டுரை அல்லது மருத்துவரின் சொந்த வெளியீடு போன்ற முதன்மை ஆதாரம் கண்டறியப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதாவது, “இந்த வாசகம் 2002 முதல் இணையத்தில் Greenberg பெயரில் காணப்படுகிறது” என்பது உறுதிப்படுத்தக்கூடியது. ஆனால் அவர் உண்மையில் இந்த வார்த்தைகளைச் சொன்னார் என்பதை உறுதிப்படுத்தும் முதன்மை ஆதாரம் கிடைக்கவில்லை.

    புகைப்படத்தில் இருப்பவர் மருத்துவர் அல்ல – அவர் கட்டிடக் கலைஞர் Allan Greenberg

    இந்தப் பதிவின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படமாகும்.

    படத்தில் காணப்படும் நபரின் புகைப்படத்தை நாம் இணையத்தில் ஆராய்ந்த போது, அவர் Allan Greenberg என்ற அமெரிக்க கட்டிடக் கலைஞர் என்பது தெரியவந்தது.

    Allan Greenberg-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவருடைய வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. அதில் அவர் South Africa-வின் Johannesburg-ல் பிறந்தவர், University of Witwatersrand-ல் architecture படித்தவர் என்றும், பின்னர் Yale University-ல் Master of Architecture பட்டம் பெற்றவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறையின் Diplomatic Reception Rooms இணையதளமும் Allan Greenberg-ஐ architect என்று தெளிவாக குறிப்பிடுகிறது. அவர் அமெரிக்க வெளியுறவுத்துறையின் Diplomatic Reception Rooms-ன் முக்கிய வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    University of Notre Dame-ன் Driehaus Prize பதிவிலும் Allan Greenberg architecture துறையைச் சேர்ந்தவர் என்றும், 2006ஆம் ஆண்டு அந்த விருதைப் பெற்றவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் Architectural Digest அவரை South African-born architect என்றும், Allan Greenberg Architect நிறுவனத்தின் principal என்றும் குறிப்பிடுகிறது.

    மேலும் Allan Greenberg எழுதிய புத்தகங்கள்  amazon இல் விற்பனைக்கு விளப்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அவர் தொடர்பான அறிமுகத்திலும் மேற்குறிப்பிட்ட பதிவில் இருந்த அதே புகைப்படம் இருப்பதனையும் காணமுடிந்தது.

    இதனால், சமூக வலைத்தளப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள Allan Greenberg-ன் புகைப்படம், மருத்துவரின் புகைப்படம் எனக் குறிப்பிடப்படுவது தவறானது.

    அப்படியானால் இந்தக் கருத்தை யார் கூறியிருக்கலாம்?

    இந்தப் பதிவில் குறிப்பிடப்படும் பெயர் Alan Greenberg என்றும் Allan Greenberg என்றும் வெவ்வேறு இடங்களில் காணப்படுகிறது.

    படத்தில் காணப்படும் Allan Greenberg இந்தக் கருத்தைத் தெரிவித்ததாக உறுதிப்படுத்தும் நம்பகமான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

    அதேபோன்று, Alan Greenberg என்ற பெயரில் வேறு சில மருத்துவர்கள் மற்றும் பிரபலங்கள் இருப்பதுவும் எமது ஆய்வின் மூலம் தெரியவந்தது.Alan C. Greenberg என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல Wall Street நிதி நிர்வாகி ஆவார். 1949ஆம் ஆண்டு Bear Stearns நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய அவர், பின்னர் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாகவும் குழும தலைவராகவும் பணியாற்றினார். அவர் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர் அல்ல. மற்றும் George Washington University-யுடன் தொடர்புடைய Alan E. Greenberg அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர் ஆவார். அவர் George Washington University (GW)-யின் Milken Institute School of Public Health-ல் Epidemiology பேராசிரியராக உள்ளார். அதே பல்கலைக்கழகத்தின் School of Medicine and Health Sciences-லும் Medicine மற்றும் Microbiology, Immunology and Tropical Medicine பேராசிரியராக உள்ளார் எனினும் இவர்கள் தொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில் இவர்கள் இந்த மேற்கோளைத் தெரிவித்ததாக ஆதாரம் இல்லை என்பதுடன் மேற்குறிப்பிட்ட மருத்துவர் தற்போது வரை பணியில் இருக்கும் ஒரு மருத்துவர் என்பதுவும் தெரியவந்தது.

    ஆனால், இந்தக் கூற்றின் பின்னணியில் வேறு ஒரு Alan Greenberg இருக்கக்கூடும் என்பதற்கான தகவல்கள் தொடர்பிலும் நாம் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம். 

    இதன்போது, பதிவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள வார்த்தைகளைக் கூறியிருக்கக்கூடிய நபர் பல ஆண்டுகளாக மரபுவழி மருத்துவத்தில் பணியாற்றி, பின்னர் இயற்கை மருத்துவப் பயிற்சியைத் தொடங்கிய ஆலன் கிரீன்பெர்க் ஆக இருக்கக்கூடும் என்ற அடிப்டையில் நாம் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம் . ஆனால் இவர் அந்த படத்தில் உள்ளவரிடமிருந்து வேறுபட்டவர், இந்தத் தகவலை, தற்போது செயலிழந்த detoxscience.net என்ற இணையதளத்தில் காணலாம்.

    காப்பகப்படுத்தப்பட்ட பழைய தகவல்களின்படி, Alan S. Greenberg, M.D. என்ற அமெரிக்க முன்னாள் மருத்துவர் வழக்கமான மருத்துவ முறைகள் குறித்து விமர்சனமான கருத்துகளை முன்வைத்திருந்ததாகத் தெரிகிறது. அவருடைய பெயரில் மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவிர்க்க வேண்டும் என்றும், மருந்துகள் நச்சுத்தன்மை கொண்டவை என்றும் கூறப்படும் மேற்கோள்கள் 2002ஆம் ஆண்டு முதல் இணையத்தில் காணப்படுகின்றன. எனினும், இந்த மேற்கோள்களின் முதன்மை மூலத்தை முழுமையாக உறுதிப்படுத்துவது சிக்கலானது. 

    ஆலன் கிரீன்பெர்க்கின் வார்த்தைகள் பற்றிய முதல் குறிப்பு 2002 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. மேரிலாந்து வெளியீடான  BPQA நியூஸ்லெட்டர் , அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததாகக் கூறுகிறது (பக். 3) . இந்தத் தகவலுக்கான உறுதிப்படுத்தலை மேரிலாந்து மருத்துவ ஒன்றியத்தின் இணையதளத்தில் காணலாம்  , 

    மேலும் Demagog என்ற நிறுவனம் இந்த கூற்று தொடர்பில் 2022 ஆம் மேற்கொண்ட உண்மை சரிபார்ப்பு ஆய்வில் 1970-ல் வழங்கப்பட்ட ஆலன் கிரீன்பெர்க்கின் உரிமம் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும், சமூக வலைத்தளங்களில் இந்த மேற்கோளுடன் பயன்படுத்தப்படும் புகைப்படம் Alan S. Greenberg-ன் புகைப்படம் அல்ல அதே பெயரைக் கொண்ட வேறு நபரான கட்டிடக் கலைஞர் Allan Greenberg-ன் புகைப்படமாகும். 

    பதிவில் கூறப்படும் மருத்துவக் கருத்துக்கள் அறிவியல் ஆதாரங்களுடன் பொருந்துகின்றனவா?

    இந்தப் பதிவில் மருத்துவம் தொடர்பாக பல பொதுவான கூற்றுகள் முன்வைக்கப்படுகின்றன.

    உதாரணமாக,

    • “பெரும்பாலான மருந்துகள் நச்சுத்தன்மை கொண்டவை”
    • “மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவிர்க்க வேண்டும்”
    • “தடுப்பூசிகள் மிகவும் ஆபத்தானவை”
    • “பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் தேவையற்றவை” என்பவையாகும்

    இவை மருத்துவ அறிவியலின் தற்போதைய ஆதாரங்களுடன் பொதுவாகப் பொருந்தவில்லை.

    உதாரணமாக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தற்போதைய தகவலின்படி, தரமான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகள் சுகாதார அமைப்பின் முக்கிய அங்கங்களாகும். WHO அத்தியாவசிய மருந்துகளை அவற்றின் நன்மைகள், தீமைகள் மற்றும் ஆதாரங்களை கருத்தில் கொண்டு தேர்வு செய்கிறது.

    அதேபோன்று, தடுப்பூசிகள் குறித்து WHO தெரிவிப்பதாவது, தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு பல கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன பயன்பாட்டுக்குப் பிறகும் அவற்றின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

    WHO மேலும், கடந்த 50 ஆண்டுகளில் 14 முக்கியமான நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் குறைந்தது 154 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக குறிப்பிடுகிறது.

    அறுவை சிகிச்சை தொடர்பாகவும், WHO கூறுவது, பல்வேறு காயங்கள், புற்றுநோய், கர்ப்பத்துடன் தொடர்புடைய சிக்கல்கள் உள்ளிட்ட பல நிலைகளுக்கு அறுவை சிகிச்சை முக்கியமான சிகிச்சையாக இருப்பதாகும். சரியான நேரத்தில் வழங்கப்படும் அறுவை சிகிச்சை உயிர்களைக் காப்பாற்றவும், ஊனமுற்ற நிலைகளைத் தடுக்கவும் உதவுகிறது.

    மேலும், Centers for Disease Control and Prevention இன்  தற்போதைய வழிகாட்டுதலின்படி, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கும், தடுப்பூசிகள் உள்ளிட்ட தடுப்பு சுகாதார சேவைகளைப் பெறுவதற்கும் உதவுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவற்றைஅடிப்படையாகக் கொண்டு நாம் பார்க்கும் போது “மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவிர்ப்பதே நீண்ட ஆயுளுக்கான சிறந்த வழி” என்ற பொதுவான கூற்றுக்கு நம்பகமான மருத்துவ ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாகின்றது.

    கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்க 

    எனவே மேற்குறிப்பிட்ட பதிவில் உள்ள கூற்று தொடர்பில் நாம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்க அவர்களை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது அவர் முக்கியமாக தெரிவித்த ஒரு விடயம் என்னவெனில் நமக்கு ஒரு நோய் ஏற்படும் போது வழங்கப்படும் மருந்துகள் நமது உடலுக்கு வழகப்படுவதில்லை  அவை நமது உடலில் ஏற்பட்ட நோயின் பாதிப்பை குணப்படுத்துவதற்காகவே வழங்கப்படுகின்றது என்பதனை குறிப்பிட்டார். 

    ஒரு பாதுகாப்பான பொருள் கூட அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும்போது நஞ்சாக மாறலாம். ஆகவே ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு வரம்பு (Safety margin) உள்ளது. சில மருந்துகளுக்கு இந்த வரம்பு மிகவும் குறைவு, அதாவது ஒரு சிறிய கூடுதல் அளவு கூட கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும் அமிலம் போன்ற விடயங்கள் நமது உடலில் சேரும் போது அவற்றை நமது உடல் ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு சில பக்கவிளைவுகளை உருவாக்கும் அதே போன்று இயற்கை மருத்துவத்தை எடுத்துக்கொணடாலும் நோய்களை அறிந்து அவற்றுக்கு ஏற்ப சரியான விதத்தில் சரியாள அளவில் சிகிச்சையளிக்க வேண்டும் இல்லையெனில் அவற்றினாலும் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என தெரிவித்தார்.

    எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட கூற்றில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நாம் முழுமையாக மறுக்க முடியாது எனவும் அதனை மக்கள் சரியாக புரிந்துகொண்டு அதன்படி சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர அதனை தவறாக புரிந்கொண்டு ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து தவர்த்துக்கொள்வதே சிறந்தது எனவும் குறிப்பிட்டார்.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    சமூக வலைத்தளங்களில் “மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவிர்ப்பதே நீண்ட ஆயுளுக்கான சிறந்த வழி” என்றும், “ஏறக்குறைய அனைத்து மருந்துகளும் நச்சுத்தன்மை கொண்டவை” என்றும் “Dr. Allan Greenberg, MD” பெயரில் பகிரப்படும் இந்தக் கூற்றை ஆய்வு செய்ததில், இதில் பல்வேறு நபர்களின் அடையாளங்கள் ஒன்றுடன் ஒன்று தவறாக இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    குறிப்பாக, பதிவுடன் பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பவர் மருத்துவர் அல்ல; Allan Greenberg என்ற அமெரிக்க கட்டிடக் கலைஞர் என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் உள்ளன.

    அதேவேளை, Alan S. Greenberg, M.D. என்ற முன்னாள் மருத்துவருடன் இந்த மேற்கோள் தொடர்புடையதாக இருக்கக்கூடிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவரது பெயரில் இதே கருத்து குறைந்தது 2002ஆம் ஆண்டு முதல் இணையத்தில் காணப்படுகிறது. எனினும், இந்த மேற்கோளுக்கான உண்மையான நேர்காணல், மருத்துவரின் சொந்த வெளியீடு அல்லது வேறு முதன்மை ஆதாரம் கிடைக்காததால், இந்த முழு மேற்கோளையும் அவர் நேரடியாகக் கூறினார் என்று உறுதியாகக் கூற முடியாது.

    மேலும், “பெரும்பாலான மருந்துகள் நச்சுத்தன்மை கொண்டவை”, “மருந்துகள் நோயை குணப்படுத்துவதில்லை” மற்றும் “மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவிர்க்க வேண்டும்” போன்ற பொதுவான கூற்றுகளுக்கு நம்பகமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை. மாறாக, உலக சுகாதார ஸ்தாபனம் தரமான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகளை சுகாதாரப் பாதுகாப்பின் முக்கிய அங்கமாகக் குறிப்பிடுகிறது. தேவையான மருத்துவ சிகிச்சை, தடுப்பு சுகாதார சேவைகள் மற்றும் பொருத்தமான அறுவை சிகிச்சைகள் பல்வேறு நோய்கள் மற்றும் அவசரநிலைகளில் முக்கியமானவை என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே, இந்தப் பதிவில் இடம்பெறும் மேற்கோள் ஒரு குறிப்பிட்ட முன்னாள் மருத்துவரின் கருத்துகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடியதாக இருந்தாலும், அதனுடன் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் தவறானது. மேலும், மேற்கோளின் முதன்மை ஆதாரம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதிலுள்ள மருத்துவக் கருத்துகளை பொதுவான மருத்துவ உண்மைகளாகக் கருதுவதும் தவறானது. குறிப்பாக, மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவிர்க்க வேண்டும் அல்லது மருந்துகளைத் தவிர்த்து இயற்கை மருத்துவத்தை மட்டுமே நாட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை.

    ஆகவே, “மருத்துவர் Allan Greenberg மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்” எனப் புகைப்படத்துடன் பகிரப்படும் இந்தப் பதிவு பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியதாகும்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவிர்ப்பதே நீண்ட ஆயுளுக்கான சிறந்த வழி என Allan Greenberg பெயரில் பரவும் தகவல் உண்மையா?

    Fact Check By: Suji Shabeedharan

    Result: Missing Context

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.