Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    வார இறுதி நாட்களில் தனிப்பட்ட பயணங்களுக்காக Metro பேருந்துகளை வாடகைக்கு எடுக்கலாம் என பகிரப்படும் தகவல் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-03
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO Lanka Metro Transit (Pvt) Ltd நிறுவனத்தினால், பயணிகளின் தேவை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் வார இறுதி நாட்களில், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை முன்பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுவ

    Subscribe to our WhatsApp Channel

    INTRO

    Lanka Metro Transit (Pvt) Ltd நிறுவனத்தினால், பயணிகளின் தேவை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் வார இறுதி நாட்களில், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை முன்பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுவதாகக் கூறும் பல செய்திப் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

    எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    வார இறுதி நாட்களில் தனிப்பட்ட பயணங்களுக்கு மெட்ரோ பேருந்துகளை வாடகைக்கு எடுக்கலாம் என பகிரப்பட்ட பேஸ்புக் பதிவின் திரைப்பிடிப்பு

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் வார இறுதி நாட்களில் தனிப்பட்ட பயணங்களுக்கு மெட்ரோ பேருந்துகளை வாடகைக்கும் எடுக்கலாம்!

    இலங்கையில் Lanka Metro Transit நிறுவனத்தின் மெட்ரோ பேருந்து சேவை முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ பேருந்துகளை தனிப்பட்ட பயணங்களுக்காக வாடகைக்கு எடுக்கக்கூடிய புதிய சேவையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

    வார இறுதிகளில் வழக்கமான பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அந்த நாட்களில் பேருந்துகளை சிறப்பாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக Lanka Metro Transit அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இந்தத் திட்டம் தற்போது திட்டமிடல் கட்டத்தில் உள்ளதுடன், மெட்ரோ பேருந்து சேவை முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.

    இதன்படி, ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் பொதுமக்களுக்கு மெட்ரோ பேருந்துகளை தனிப்பட்ட பயணங்களுக்கு வாடகைக்கு பெறும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்தை முன்பதிவு செய்ய விரும்புவோர், இதற்காக அறிவிக்கப்படும் Metro Bus Hotline ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

    மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேருந்துகளின் உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்க முடியும் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.என குறழப்பிட்டு நேற்றைய தினம் (2026.10.02) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    Lanka Metro Transit (Pvt) Ltd நிறுவனத்தினால் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பயணங்களுக்காக இந்தப் பேருந்துகளை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான வசதி வழங்கப்படும் என மெட்ரோ நிறுவனத்தினால் ஏதேனும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா? என்பதனை முதற்கட்டமாக நாம் ஆய்வு செய்தோம். இதன்போது, இவ்வாறான எந்தவொரு உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்பது தெளிவாகியது.

    இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நேரடியாக விசாரிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம்.

    லங்கா மெட்ரோ டிரான்சிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்

    இந்த விடயம் தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக, லங்கா மெட்ரோ டிரான்சிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் S.M.U.P. திலகரத்ன அவர்களிடம் நாம் நேரடியாக வினவினோம். இதன்போது, தனிப்பட்ட பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் அல்லது எதிர்காலத்தில் இதனை பெற்றுக்கொள்ள முடியும் என சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பதிவுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என அவர் தெரிவித்தார்.

    மெட்ரோ பேருந்துகளின் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 65 கிலோமீற்றர் எனவும், அதன் காரணமாக குறித்த பேருந்துகளை அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே, சுற்றுலாப் பயணங்கள் போன்ற தனிப்பட்ட பயணங்களுக்காக இந்தப் பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை என்றும், இது தொடர்பாக எந்தவொரு தீர்மானமோ அல்லது கலந்துரையாடலோ இடம்பெறவில்லை என்றும் நிறுவனத்தின் தலைவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

    மெட்ரோ பேருந்துகளை தனிப்பட்ட பயணங்களுக்காகப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பதிவுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என லங்கா மெட்ரோ நிறுவனம் தனது உத்தியோகபூர்வ Facebook பக்கத்திலும் பதிவொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பை இங்கே காணலாம்.

    மெட்ரோ பேருந்து வாடகை தகவல் போலியானது என லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனம் வெளியிட்ட பேஸ்புக் பதிவின் திரைப்பிடிப்பு

    போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு

    இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரின் ஊடகச் செயலாளரிடமும் நாம் விசாரணை மேற்கொண்டோம். இதன்போது, மெட்ரோ பேருந்துகள் தனிப்பட்ட பயணங்களுக்காக வழங்கப்படும் என சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பதிவுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என அவரும் தெரிவித்தார். அவ்வாறான எந்தவொரு ஏற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்ட பதிவு கீழே காணப்படுகிறது. அதே பதிவை போக்குவரத்து பிரதி அமைச்சரும் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் தனிப்பட்ட பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறி பகிரப்பட்டு வரும் பதிவுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பது தெரியவந்துள்ளது. அவ்வாறான எந்தவொரு ஏற்பாடும் இல்லை என்பதை லங்கா மெட்ரோ நிறுவனம் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு ஆகியவை உறுதிப்படுத்தியுள்ளன.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: வார இறுதி நாட்களில் தனிப்பட்ட பயணங்களுக்காக Metro பேருந்துகளை வாடகைக்கு எடுக்கலாம் என பகிரப்படும் தகவல் உண்மையா?

    Fact Check By: Suji Shabeedharan

    Result: False

    சந்தேகத்துக்குரிய காணொளிகள் மற்றும் படங்களை சரிபார்க்க ஃபேக்ட் கிரஸண்டோவின் வாட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்புமாறு கோரும் பதாகை
    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-03

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.