Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நாகக் கைத்தடியுடன் நடைபயணம் மேற்கொண்ட பிக்கு கிரேஷன் கெரமினியகேவா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-11-02
    8 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    2026 ஒக்டோபர் 10ஆம் திகதி, கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கண்டி தலதா மாளிகைக்கு அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட “காவிக்கு நீதி” (සිවුරට යුක්තිය) என்ற நடைபயணம், ஒக்டோபர் 15ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. Link இதற்குச் சுமார் இரண்டு வாரங்களு

    2026 ஒக்டோபர் 10ஆம் திகதி, கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கண்டி தலதா மாளிகைக்கு அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட “காவிக்கு நீதி” (සිවුරට යුක්තිය) என்ற நடைபயணம், ஒக்டோபர் 15ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. Link

    இதற்குச் சுமார் இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ஒக்டோபர் 30ஆம் திகதி, நாகப்பாம்பின் உருவம் செதுக்கப்பட்ட மரக் கைத்தடியை ஏந்தியவாறும், கண்ணாடி அணிந்தவாறும் “இரத்தினபுரி போதிதம்ம தேரர்” என அறியப்படும் ஒரு பௌத்த பிக்கு, “சிங்கள பௌத்தர்களை ஒன்றிணைக்கும் நடைபயணம்” என்ற பெயரில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய நடைபயணத்தை ஆரம்பித்தார்.

    அன்றைய தினமே, இந்த பிக்கு உண்மையான பௌத்த துறவி அல்ல என்றும், அவர் பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் அம்பலாங்கொடை நகரசபை உறுப்பினரான கிரேஷன் கெரமினியகே என்றும் தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் பரவத் தொடங்கின.

    இந்த நிலையில், குறித்த இரண்டு புகைப்படங்களிலும் காணப்படுபவர்கள் உண்மையில் ஒரே நபரா அல்லது இருவேறு நபர்களா என்பது குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    பிக்கு கிரேஷன் கெரமினியகே தொடர்பான நீண்ட பேஸ்புக் பதிவின் திரைப்பிடிப்பு

    Facebook | Archived Link

    சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின்படி, “சிங்கள பௌத்தர்களை ஒன்றிணைக்கும் நடைபயணம்” என்ற பெயரில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த காவி உடை அணிந்த நபர், உண்மையான பௌத்த பிக்கு அல்ல என்றும், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அம்பலாங்கொடை நகரசபை உறுப்பினரான கிரேஷன் கெரமினியகே என்றும் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    மேலும், அவர் இதற்கு முன்னரும் ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு ஆதரவான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தன்னைப் பௌத்த மதத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதியாக அறிமுகப்படுத்தியதாகவும் சமூக ஊடகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், பௌத்த பிக்குவின் வேடத்தில் அரசியல் நோக்கத்துடன் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டதா என்ற கேள்வி சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த விடயம் சமூக ஊடகத்தில் அதிகளவானோர் பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.

    ராஜபக்ச குடும்பத்தினரை விமர்சிக்கும் ‘மாட்டிக்கிட்ட பங்கு’ தலைப்பில், நாகக் கைத்தடியுடன் நடக்கும் பிக்குவும் நபரும் இடம்பெறும் பேஸ்புக் பதிவின் திரைப்பிடிப்பு (1)
    ராஜபக்ச குடும்பத்தினரை விமர்சிக்கும் ‘மாட்டிக்கிட்ட பங்கு’ தலைப்பில், நாகக் கைத்தடியுடன் நடக்கும் பிக்குவும் நபரும் இடம்பெறும் பேஸ்புக் பதிவின் திரைப்பிடிப்பு (2)
    ராஜபக்ச குடும்பத்தினரை விமர்சிக்கும் ‘மாட்டிக்கிட்ட பங்கு’ தலைப்பில், நாகக் கைத்தடியுடன் நடக்கும் பிக்குவும் நபரும் இடம்பெறும் பேஸ்புக் பதிவின் திரைப்பிடிப்பு (3)
    ‘நேற்று இன்று’ எனத் தலைப்பிட்டு இருவரின் படங்களை ஒப்பிடும் பேஸ்புக் பதிவின் திரைப்பிடிப்பு

    FB | FB | FB | FB

    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கூற்று:

    2026 ஒக்டோபர் 30ஆம் திகதி, நாகப்பாம்பு உருவம் கொண்ட கைத்தடியை ஏந்தியவாறு கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, பொதுஜன பெரமுனவின் முன்னாள் அம்பலாங்கொடை நகரசபை உறுப்பினரும், “பஹனட்ட தெல்” (விளக்கிற்கு எண்ணெய்) இயக்கத்தின் நிறுவனருமான கிரேஷன் கெரமினியகேதானா? என்பதனையே ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இடது பக்கப் புகைப்படத்தில் இருப்பவர் “பஹனட்ட தெல்” இயக்கத்தின் கிரேஷன் கெரமினியகே

    கிரேஷன் கெரமினியகே 2021ஆம் ஆண்டு நாடு முழுவதும் பேசப்பட்ட நபராக இருந்தார். அப்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பலாங்கொடை நகரசபை உறுப்பினராக இருந்த அவர், “பஹனட்ட தெல்” என்ற இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

    2021 ஏப்ரல் 05ஆம் திகதி, படபொல நகரில் தனியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதே பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த இரண்டு பிரதேச அரசியல்வாதிகள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். Link

    அந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான செய்தி அறிக்கையின் காணொளியில், “கிரேஷன் கெரமினியகே, பஹனட்ட தெல் தேசிய இயக்கத்தின் நிறுவனர், பொதுஜன பெரமுனவின் அம்பலாங்கொடை நகரசபை உறுப்பினர்” என்ற பெயர்ப்பலகையுடன் அவரது முகத்தைத் தெளிவாகக் காண முடிகிறது.

    சமூக ஊடகப் பதிவில் இடதுபுறம் காணப்படும் புகைப்படத்தில் இருப்பவரும் இவரே என்பதை முக அம்சங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அறிய முடிகிறது.

    கிரேஷன் கெரமினியகே பேசும் செய்தி வீடியோவின் காட்சி

    ஒக்டோபர் 31ஆம் திகதி பலப்பிட்டியவில் சிவில் உடையில் கிரேஷன் கெரமினியகே

    ஒக்டோபர் 31ஆம் திகதி காலை, ஃபேஸ்புக் பயனர் ஒருவர் கிரேஷன் கெரமினியகேவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படம் சற்று முன்னர் பலப்பிட்டிய பிரதேச சபையில் எடுக்கப்பட்டது என்றும், அவர் தற்போது அரசியலில் இருந்து விலகி அங்கு பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். Link

    அந்தப் புகைப்படத்தில் ஜெக்கெட் அணிந்திருக்கும் நபரின் முகத் தோற்றம், 2021ஆம் ஆண்டு வெளியான செய்திக் காணொளியில் காணப்படும் கிரேஷன் கெரமினியகேவின் முகத் தோற்றத்துடன் ஒத்துப்போகிறது.

    கிரேஷன் கெரமினியகேவுடன் மற்றொருவர் நிற்கும் புகைப்படம் இடம்பெறும் பேஸ்புக் பதிவின் திரைப்பிடிப்பு

    கிரேஷன் கெரமினியகே துறவறம் பூண்டதாக தெரிவிக்கப்பட்டவர் “இரத்தினபுரி போதிதம்ம தேரர்”

    ஒக்டோபர் 30ஆம் திகதி நடைபயணத்தை ஆரம்பித்தபோது எடுக்கப்பட்ட காணொளி, திகதியுடன் செய்தி ஊடகப் பக்கம் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், “நாகக் கைத்தடியை ஏந்தியவாறு இரத்தினபுரி போதிதம்ம தேரர் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்தார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    நாகக் கைத்தடியுடன் ரத்னபுரி போதிதம்ம தேரர் கொழும்பு நோக்கி நடைபயணம் தொடங்கியதைக் குறிக்கும் செய்திப் படம் (30-10-2026)

    “போதிதம்ம மனித அகிம்சை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு” என்ற பெயரில், குறித்த தேரர் தலைவராகச் செயல்படும் ஃபேஸ்புக் பக்கம் இங்கே காணலாம்.

    இந்தப் பக்கத்தில் 2025 ஜூன் மாதம் முதலே பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2025 ஜூலை மாதம் வெளியிடப்பட்ட சுவரொட்டியிலும், 2026 ஜனவரி மாதம் பகிரப்பட்ட காணொளியிலும் குறித்த நபர் காவி உடை அணிந்து “இரத்தினபுரி போதிதம்ம தேரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

    இதன் மூலம், குறித்த நடைபயணத்திற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே அவர் பௌத்த பிக்குவாகப் பொதுவெளியில் தோன்றியுள்ளார் என்பது உறுதிப்படுகிறது.

    போதிதம்ம தேரர் தோன்றும் வீடியோவுடன் கூடிய பேஸ்புக் பதிவுகளின் திரைப்பிடிப்பு (1)
    போதிதம்ம தேரர் தோன்றும் வீடியோவுடன் கூடிய பேஸ்புக் பதிவுகளின் திரைப்பிடிப்பு (2)

    முகத் தோற்ற ஒப்பீடு

    சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தொடர்பாக போதிதம்ம தேரர் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். அது பின்வருமாறு:

    மேலும், சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படங்களில் குறித்த பிக்கு கண்ணாடி அணிந்திருப்பதால் அவரது முகத்தைத் தெளிவாகக் காண முடியவில்லை.

    எனினும், ஒக்டோபர் 31ஆம் திகதி வெளியான நேர்காணல் ஒன்றின்போது (15:58 முதல் 16:13 நிமிடங்கள் வரை) அவர் கண்ணாடியைக் கழற்றி கேமராவை நோக்கிப் பேசியுள்ளார். அப்போது அவரது முகத் தோற்றத்தையும் கிரேஷன் கெரமினியகேவின் முகத் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இருவருக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் காணப்படுகின்றன.

    கண்ணாடி அணிந்து பேசும் போதிதம்ம தேரரின் வீடியோ காட்சி
    புன்னகையுடன் கைகளை இணைத்துப் பேசும் போதிதம்ம தேரரின் வீடியோ காட்சி

    கீழே 2021 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கிரேஷன் கெரமினியவின் இரண்டு புகைப்படங்களும், கண்ணாடியைக் கழற்றிய போதிதம்ம தேரரின் முகத் தோற்றமும் ஒப்பிடப்பட்டுள்ளன.

    முகத்தின் வடிவம், மூக்கு, உதடுகள், பற்கள் மற்றும் காதுகளின் அமைப்பு ஆகியவற்றில் தெளிவான வேறுபாடுகளைக் காண முடிகிறது.

    தலைமுடியை மொட்டையடித்திருப்பதும், சூரியக் கண்ணாடி அணிந்திருப்பதும் ஒல்லியான உடலமைப்பைக் கொண்ட இருவரையும் ஒரே நபரைப் போலத் தோற்றமளிக்கச் செய்யலாம். இருப்பினும், இங்கு காணப்படும் முக அம்சங்களின் வேறுபாடுகள், இவர்கள் இருவேறு நபர்கள் என்பதைக் காட்டுகின்றன.

    கிரேஷன் கெரமினியகே (2021, 31 அக்டோபர் 2026) மற்றும் போதிதம்ம தேரர் (31 அக்டோபர் 2026) ஆகியோரின் முகங்களை ஒப்பிடும் படம்

    “கிரேஷன் கெரமினியகே என்ற பெயரை இன்று தான் அறிந்துகொண்டேன்” – போதிதம்ம தேரர்

    ஒக்டோபர் 30ஆம் திகதியே, தேரரின் அமைப்புக்குச் சொந்தமான ஃபேஸ்புக் பக்கத்தில் “உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை” என்ற தலைப்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டது.

    அதில், தன்னைப் பற்றி பரப்பப்படும் பொய்யான மற்றும் அவதூறான தகவல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். காணொளியை இங்கே பார்க்கலாம்.

    ஒக்டோபர் 31ஆம் திகதி யூடியூப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், கிரேஷன் கெரமினியகே என்ற நபரைப் பற்றி தான் அன்றுதான் அறிந்துகொண்டதாகவும், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகள் தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும் போதிதம்ம தேரர் தெரிவித்தார்.

    மேலும், சந்தேகம் உள்ளவர்கள் சட்டரீதியான விசாரணையை முன்னெடுக்கலாம் என்றும், தனது முகத்தைத் தெளிவாகக் காட்டுவதற்காகக் கண்ணாடியைக் கழற்றவும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    கிரேஷன் கெரமினியகே

    இது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நாம் கிரேஷன் கெரமினியகேவைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோம்.

    இதன்போது, தன்னையும் வணக்கத்திற்குரிய போதிதம்ம தேரரையும் ஒரே நபராகக் காட்டி தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    மேலும், தான் தற்போது பலப்பிட்டிய பிரதேச சபையில் பணியாற்றி வருவதாகவும், அரசியலில் இருந்து விலகிச் செயல்பட்டு வருவதாகவும் அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

    இந்தக் கூற்று ஏன் பகிரப்படுகின்றது?

    கிரேஷன் கெரமினியகே என்ற நபர் உண்மையில் உள்ளார். அவர் பொதுஜன பெரமுனவின் முன்னாள் நகரசபை உறுப்பினராகவும், “பஹனட்ட தெல்” இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவராகவும் இருந்துள்ளார். 2021ஆம் ஆண்டு அவரது வித்தியாசமான கருத்துகள் மற்றும் போராட்டங்கள் காரணமாக சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளானவராகவும் இருந்தார்.

    ஞானசார தேரருக்கு ஆதரவாக நடைபெற்ற நடைபயணத்திற்கு சில நாட்களுக்குப் பின்னர், சூரியக் கண்ணாடி மற்றும் நாகக் கைத்தடியுடன் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மற்றொரு நடைபயணமும் சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளானது. இருவரும் ஒல்லியான உடலமைப்பையும் சில தோற்ற ஒற்றுமைகளையும் கொண்டிருந்ததால், அவர்கள் ஒரே நபர் எனக் கூறி புகைப்படங்கள் பகிரப்பட்டன.

    மேலும், இந்தப் புகைப்படங்கள் பலவும் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவான குழுக்களில், குறித்த நடைபயணத்தை “ராஜபக்ஷக்களின் அரசியல் திட்டம்” எனச் சித்தரித்து பகிரப்பட்டிருந்தன.

    ஒரு நடைபயணத்தையோ அல்லது தேரரின் கருத்துகளையோ விமர்சிப்பது வேறு விடயம். ஆனால், அந்தப் பௌத்த பிக்குவை மற்றொரு நபர் என அடையாளப்படுத்துவது ஆதாரமற்ற கூற்றாகும். இது சம்பந்தப்பட்ட இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.

    ஞானசார தேரருக்கு ஆதரவாக நடைபெற்ற நடைபயணம் தொடர்பாகப் பரவிய AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் குறித்து நாம் மேற்கொண்ட ஆய்வை இங்கே பார்க்கலாம்.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஒக்டோபர் 30ஆம் திகதி நாகக் கைத்தடியை ஏந்தியவாறு கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, பொதுஜன பெரமுனவின் முன்னாள் அம்பலாங்கொடை நகரசபை உறுப்பினரான கிரேஷன் கெரமினியகே அல்ல என்பதுடன் அவர் 2025ஆம் ஆண்டு முதலே “இரத்தினபுரி போதிதம்ம தேரர்” என்ற பெயரில் காவி உடை அணிந்து சமூக ஊடகங்களில் தோன்றி வரும் பௌத்த பிக்கு ஆவார் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

    2021ஆம் ஆண்டு செய்திக் காட்சிகளிலும், ஒக்டோபர் 31ஆம் திகதி பலப்பிட்டியவில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலும் காணப்படும் கிரேஷன் கெரமினியகேவின் முகத் தோற்றத்திற்கும், கண்ணாடியைக் கழற்றிய போதிதம்ம தேரரின் முகத் தோற்றத்திற்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும், இருவரின் உடலமைப்பும் தோற்றமும் ஓரளவு ஒத்திருந்ததால், இவ்வாறான தவறான பதிவுகள் உருவாகிப் பரவியுள்ளன.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-11-02

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.