Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நயன்தாரா மொட்டையடித்ததாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-08-20
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : பிரபல தென்னிந்திய நடிகை நயன்தாரா மொட்டை அடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.  எனவே இந்த தகவலின் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்வி

    Subscribe to our WhatsApp Channel

    INTRO :

    பிரபல தென்னிந்திய நடிகை நயன்தாரா மொட்டை அடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. 

    எனவே இந்த தகவலின் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    என்ன நேர்த்தியாய் இருக்கும் என தெரிவித்து இந்த புகைப்படம் பதிவேற்றப்பட்டிருந்தது.

    மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    உண்மையில் நடிகை நயன்தாரா மொட்டை அடித்திருப்பாராயின் அது குறித்து இந்திய ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான தகவல்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. எனினும் கடந்த ஏப்ரல் 9, 2026 அன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் திருப்பதி சென்றதாக, ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. NDTV Link l India Today Link  

    மேலும் இன்ஸ்டகிராம் பக்கங்களிலும் அவர் திருப்பதி சென்ற போது எடுக்கப்பட்ட காணொளிகளும் வெளியாகியிருந்தது. 

    நயன்தாரா கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி திருப்பதி சென்ற படங்களை எடிட் செய்து இவ்வாறு அவர் மொட்டை அடித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமை இதன்மூலம் தெளிவாகின்றது.

    அதேபோன்று நடிகை நன்தாரா மொட்டை அடித்ததாக பகிரப்படும் புகைப்படத்தை Ai Detective Tool இற்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது அந்த புகைப்படமானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்டுள்ளமையும் உறுதியானது.

    மேலும் அண்மையில் நயன்தாரா அவர்களின் தயாரிப்பில், நயன்தாரா மற்றம் கவின் நடிப்பில் வெளிவரவுள்ள ஹாய் திரைப்படத்தின் விளம்பர நடவடிக்கைகளுக்காக zee Tamil தொலைக்காட்சி நடத்திய ஒரு நேர்காணலில் பங்குபற்றிய போது அவர் தலைமுடியுடன் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….


    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நயன்தாரா மொட்டை அடித்ததாக பகிரப்படும் புகைப்படம் போலியானது என்பதுடன், அவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவருடன் திருப்பதி சென்ற புகைப்படத்தினை செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் எடிட் செய்து இவ்வாறு மொட்டை அடித்ததாக பகிரப்படுகின்றது என்பதுவும் கண்டறியப்பட்டது.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: நயன்தாரா மொட்டையடித்ததாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    Fact Check By: Suji Shabeedharan

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-08-20

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.