Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இலங்கை வங்கியின் ATM இயந்திரத்தின் திரையில் எழுத்துப்பிழை என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-06-27
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    இலங்கை வங்கியின் தானியங்கி இயந்திரத்தில் (ATM) அட்டையை உட்செலுத்தவும் என தெரிவிக்கப்படுவதற்கு பதிலாக ஆபாசமான வார்த்தை திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு படத்துடனான பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமு

    இலங்கை வங்கியின் தானியங்கி இயந்திரத்தில் (ATM) அட்டையை உட்செலுத்தவும் என தெரிவிக்கப்படுவதற்கு பதிலாக ஆபாசமான வார்த்தை திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு படத்துடனான பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.

    எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின் விவரம் (What is the claim)

    Facebook | Archived Link 

    குறித்த பதிவில் இலங்கை வங்கியின் ATM வாசகம்.

    இலங்கை வங்கியின் ATM மூலம் தமிழ் மொழி பேசும் வாடிக்கையாளர்கள் பணம் பெறுவதற்கு அட்டையை உட்செலுத்தவும் என்பதற்கு வேறு ஒரு ஆபாசமான வாசகத்தை சொல்லுகிறது.

    அதனை நீங்களே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    இலங்கை வங்கி அதிகாரிகளே இது உங்களின் மேலான கவனத்திற்கு என தெரிவிக்கப்பட்டே அந்த புகைப்படமானது கடந்த 2025.06.24 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

     Fact Check (உண்மை அறிவோம்)

    இது குறித்து நாம் ஆய்வினை மேற்கொள்ளும் போது இதே புகைப்படமானது 2023 ஆம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

    Archived

    இலங்கை வங்கி

    மேலும் குறித்த பதிவில் இது இலங்கை வங்கியின் ATM என குறிப்பிடப்பட்டிருந்தமையினால் நாம் அது தொடர்பில் ஆராய்ந்தோம். இதன்போது சமூக ஊடகப் பதிவில் பகிரப்பட்ட குறித்த புகைப்படத்தில் உள்ள ATM இயந்திரத்திற்கும்  இலங்கை வங்கியின் ATM இயந்திரத்தின் தோற்றத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்பட்டன.

    குறித்த புகைப்படத்தினை நாம் நன்கு அவதானித்த போது அதில் உள்ள எழுத்துக்களின் வடிவம் மற்றும் அவற்றுக்கு இடையிலான இடைவெளி என்பன அசாதாரண முறையில் காணப்பட்டமையினையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

    மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படத்தில் ATM இயந்திரத்தின் பிம்பம் தென்பட்டது. அது தொடர்பில் நாம் அவாதானித்த போது  உண்மையில் அவ்வாறு பிம்பம் அந்த திரையில் தென்படுமாயின் அது இரண்டு பக்கத்திலும் தென்படும் ஆனால் குறித்த புகைப்படத்தில் ATM இயந்திரத்தின் பிம்பம் ஒரு பக்கத்தில் மாத்திரமே தென்பட்டதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

    அதனடிப்படையில் இந்த புகைப்படமானது எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதனை அறியமுடிந்தது.

    மேலும் இது குறித்து நாம் இலங்கை வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது, இலங்கை வங்கியின்  ATM இயந்திரத்தில் ஒருபோது அட்டையை உட்செலுத்துமாறு திரையில் காட்சிப்படுத்தப்படாது எனவும் அட்டையின்றிய பரிவர்த்தனை என்ற வார்த்தை மாத்திரமே காட்சிப்படுத்தப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் இது போலியாக உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் எனவும் தெரிவித்தனர்.

     இலங்கை வங்கியின்  ATM இயந்திரத்தின் தோற்றம்

    https://srilanka.factcrescendo.com/tamil/wp-content/uploads/2025/06/841dbd17-7d04-42eb-949e-582dc3feafd3.mov

    தேசிய சேமிப்பு வங்கி

    குறித்த புகைப்படம் இலங்கை வங்கியின்  ATM  இல் எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தொடர்பில் நாம் தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்ட போது,  இது NSB வங்கியின் ATM  இயந்திரத்தின் திரையின் தோற்றத்தை ஒத்திருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது.

    எனவே நாம் அதனை ஆராய்ந்த போது தேசிய சேமிப்பு வங்கியின் ATM  இயந்திரத்தின் திரையிலும் இவ்வாறான வார்த்தைகள் காணப்படவில்லை.

    National Savings Bank

    எனவே நாம் இது தொடர்பில் NSB வங்கியை தொடர்புகொண்டு வினவியிருந்தோம், இதன்போது தமது வங்கியின் ATM இயந்திரத்தின் திரையில் எழுத்துக்கள் இவ்வாறான எழுத்துப்பிழைகளுடன் காட்சிப்படுத்தப்படுவதில்லை எனவும் இது வொரு எடிட் செய்யப்பட்ட புகைப்படம் எனவும் அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கை வங்கியின் ATM இயந்திரத்தில் பணம் பெறுவதற்கு அட்டையை உட்செலுத்தவும் என்று தெரிவிப்பதற்கு பதிலாக ஆபாச வார்த்தை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பகிரப்படும் புகைப்படமானது போலியானது என்பதுடன் குறித்த ATM இயந்திரமானது இலங்கை வங்கியின் இயந்திரம் அல்ல என்பதுவும் அது தேசிய சேமிப்பு வங்கியின் ATM இயந்திரத்தினை ஒத்திருந்தமையும் கண்டறியப்பட்டது.

    அத்துடன் இவ்வாறான வார்த்தைகள் தேசிய சேமிப்பு வங்கியின் ATM இயந்திரத்தின் திரையில் ஒருபோது காட்சிப்படுத்தப்படவில்லை எனவும் அது மக்களை திசைதிருப்பும் நோக்கில் வேறு சொல்லை கொண்டு எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதுவும் உறுதியானது.

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இலங்கை வங்கியின் ATM இயந்திரத்தின் திரையில் எழுத்துப்பிழை என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    Written By: Fact Crescendo Team  

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    FCT

    Fact Crescendo Team

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-06-27

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.