Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ஞானசார தேரரின் மனைவி மற்றும் மகள் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-21
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, ஞானசார தேரர் தொடர்பில் சமூக ஊட

    Subscribe to our WhatsApp Channel

    கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, ஞானசார தேரர் தொடர்பில் சமூக ஊடகங்களில் தற்போது கடும் சர்ச்சைகளும் பரபரப்பான சூழ்நிலையும் உருவாகியுள்ளன.

    இவ்வாறான பின்னணியில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படமொன்றைக் காண்பித்து, ஞானசார தேரருக்கு மனைவியும் மகளும் இருப்பதாகச் சிலர் தெரிவித்து, குறித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

    எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    ஃபேஸ்புக் பதிவின் ஸ்கிரீன்ஷாட்: ஈபிள் கோபுரத்தின் முன் இரண்டு பெண்கள் நிற்கும் புகைப்படம், ஞானசார தேரரின் மனைவி மற்றும் மகள் என்று பகிரப்படுகிறது

    Facebook | Archived Link


    ஞானசார தேரரின் தனது மனைவி மற்றும் மகள் என குறிப்பிட்டு குறித்த புகைப்படம் கடந்த 2026.10.11 ஆம் திகதி முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கூற்று:

    கலகொடஅத்தே ஞானசார தேரரின் மனைவி மற்றும் மகள் எனக் கூறி புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

    குறித்த புகைப்படத்திற்கு மற்றுமொரு விளக்கத்தை வழங்கி, அது ஞானசார தேரரின் குடும்பப் புகைப்படம் அல்ல என்றும், சுனில் கொடஹேன என்ற நபரின் குடும்பப் புகைப்படம் என்றும் மீண்டும் பகிரப்பட்டுள்ளது.

    எனவே, குறித்த புகைப்படம் என்ன? அது உண்மையில் ஞானசார தேரரின் மனைவி மற்றும் மகளைக் காட்டும் புகைப்படமா? அல்லது சுனில் கொடஹேன என்ற நபரின் குடும்பப் புகைப்படமா? என்பது தொடர்பில் நாம் ஆய்வு மேற்கொண்டோம்.

    Fact Check (உண்மை அறிவோம்)

    யூடியூப் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அஞ்சு பெரேரா என்ற நபர், ஞானசார தேரருக்கு மனைவியும் மகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பில் தான் பொறுப்புடன் கருத்துத் தெரிவிப்பதாகவும் அவர் அந்த நிகழ்ச்சியின் போது, குறிப்பிட்டுள்ளார்.

    குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை இங்கே காணலாம்.

    இவ்வாறான பின்னணியிலேயே மேற்குறிப்பிட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

    ஞானசார தேரர் துறவற வாழ்க்கைக்கு வெளியே சாதாரண நபராகக் காணப்படுவதாகக் கூறப்படும் புகைப்படமொன்று 2016ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது.

    அதற்கமைய, குறித்த புகைப்படம் தொடர்பில் நாம் உண்மைத் கண்டறியும் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தோம்.

    அந்த ஆய்வின்போது, குறித்த புகைப்படத்தில் காணப்படுபவர் ஞானசார தேரர் அல்ல என்பது தெரியவந்தது.

    மாறாக, ஞானசார தேரரின் வெளித்தோற்றத்தை மிகவும் ஒத்த, அப்போது ஜப்பானில் வசித்து வந்த சுனில் கொடஹேன என்ற மற்றுமொரு இலங்கையரே அந்தப் புகைப்படத்தில் காணப்படுகின்றார் என்பது கண்டறியப்பட்டது.

    ஞானசார தேரர் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், சுனில் கொடஹேன அவரைச் சந்தித்து அவருடன் புகைப்படமொன்றையும் எடுத்திருந்தார்.

    ஒப்பீட்டுப் படம்: சுனில் கொடஹேனவின் ஃபேஸ்புக் படங்கள் மற்றும் வைரல் கூற்றில் பகிரப்பட்ட படம்

    இது தொடர்பில் நாம் மேற்கொண்ட முழுமையான உண்மை கண்டறியும் ஆய்வை இங்கே காணலாம்.

    இதனடிப்படையில், ஞானசார தேரரின் மனைவி மற்றும் மகளைக் காட்டும் புகைப்படம் எனப் பகிரப்பட்ட வைரல் புகைப்படத்திற்கு மற்றுமொரு விளக்கத்தை வழங்கி, அது ஞானசார தேரரின் தோற்றத்தை ஒத்த சுனில் கொடஹேன என்பவரின் குடும்பப் புகைப்படம் எனவும் சமூக ஊடகங்களில் மீண்டும் பகிரப்பட்டு வருகின்றது.

    சுனில் கொடஹேனவின் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களுக்கும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படத்திற்கும் இடையிலான ஒப்பீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    ஒப்பீட்டுப் படம்: வைரல் படம் மற்றும் சுனில் கொடஹேனவின் குடும்பப் புகைப்படங்கள்

    சுனில் கொடஹேனவும் அவரது மகளும் தங்களது இன்ஸ்டாகிராம் கணக்குகளில் குடும்பப் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

    அவற்றிலிருந்து பெறப்பட்ட சுனில் கொடஹேனவின் மனைவி மற்றும் மகள் காணப்படும் புகைப்படத்திற்கும் வைரலாகப் பகிரப்படும் புகைப்படத்திற்கும் இடையிலான ஒப்பீடு மேலே காட்டப்பட்டுள்ளது.

    அந்தக் குடும்பத்தின் மேலும் சில புகைப்படங்களை இங்கே மற்றும் இங்கே காணலாம்.

    சுனில் கொடஹேன ஞானசார தேரரின் தோற்றத்தை ஒத்திருந்தாலும், மேற்குறிப்பிட்ட புகைப்படத்தில் காணப்படுவது சுனில் கொடஹேனவின் குடும்பத்தினர் அல்ல.

    சுனில் கொடஹேனவின் குடும்பப் புகைப்படங்களையும் வைரலாகப் பரவும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்தபோது, சுனில் கொடஹேன ஞானசார தேரரின் தோற்றத்தை ஒத்திருப்பது உண்மை என்றாலும், அவரது மனைவியோ பிள்ளைகளோ வைரலாகப் பரவும் புகைப்படத்தில் காணப்படுபவர்களுடன் ஒத்திருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

    மேலும், மேற்குறிப்பிட்டதைப் போன்ற புகைப்படமொன்று சுனில் கொடஹேனவின் அல்லது அவரது மகளின் சமூக ஊடகக் கணக்குகளிலும் பதிவிடப்படவில்லை.

    இதன்படி, மேற்குறிப்பிட்ட புகைப்படத்தில் காணப்படுபவர்கள் சுனில் கொடஹேனவின் குடும்பத்தினரும் அல்ல என்பது தெளிவாகின்றது.

    ஞானசார தேரரின் உருவத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம்

    வைரலாகப் பரவும் மேற்குறிப்பிட்ட புகைப்படத்தை, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைக் கண்டறியக்கூடிய பல கருவிகளின் ஊடாக நாம் ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

    அதன்போது, குறித்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

    இதன்படி, குறித்த புகைப்படம் ஞானசார தேரரின் மனைவி மற்றும் மகளைக் காட்டும் புகைப்படம் அல்ல என்பது உறுதியாகின்றது.

    அத்துடன், குறித்த புகைப்படம் ஞானசார தேரரின் தோற்றத்தை மிகவும் ஒத்த சுனில் கொடஹேனவின் குடும்பப் புகைப்படமும் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    AI பட கண்டறியும் கருவியின் ஸ்கிரீன்ஷாட்: குறித்த படம் AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகிறது
    AI கண்டறியும் கருவியின் ஸ்கிரீன்ஷாட்: குறித்த படம் 99.8% AI உருவாக்கம் மற்றும் 98.4% டீப்ஃபேக் எனக் காட்டுகிறது

    குறிப்பு: சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய மேற்குறிப்பிட்ட புகைப்படத்தை மட்டுமே நாம் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம்.குறித்த புகைப்படம் ஞானசார தேரரின் மனைவி மற்றும் மகளைக் காட்டும் புகைப்படமோ அல்லது ஞானசார தேரரின் தோற்றத்தை ஒத்த சுனில் கொடஹேனவின் குடும்பத்தினரைக் காட்டும் புகைப்படமோ அல்ல என்பதையும், அது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் இந்த ஆய்வின் மூலம் நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.இதற்கு அப்பால், ஞானசார தேரருக்கு உண்மையில் மனைவியும் மகளும் இருக்கின்றார்களா, இல்லையா என்பதை உறுதிப்படுத்துவது, எம்மால் சுயாதீனமாக உண்மைத் தகவல்களைச் சரிபார்க்கக்கூடிய வரம்பிற்கு அப்பாற்பட்ட விடயமாகும்.எனவே, அது தொடர்பான தகவல்களை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube


    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கலகொடஅத்தே ஞானசார தேரரின் மனைவி மற்றும் மகள் எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது எமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும், குறித்த புகைப்படம் ஞானசார தேரரின் மனைவி மற்றும் மகளைக் காட்டும் புகைப்படம் அல்ல என்பதும், ஞானசார தேரரின் தோற்றத்தை ஒத்த சுனில் கொடஹேனவின் குடும்பத்தினரைக் காட்டும் புகைப்படம் எனப் பகிரப்படும் பதிவுகளும் தவறாக வழிநடத்தக்கூடியவை என்பதும் தெரியவந்துள்ளது.

    இதற்கு முன்னர் நாம் மேற்கொண்ட உண்மைக் கண்டறியும் ஆய்வில் கண்டறியப்பட்டதன்படி, சுனில் கொடஹேன என்ற நபர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் தோற்றத்தை மிகவும் ஒத்தவர் என்பது உண்மையாகும்.

    எனினும், அவரது குடும்பப் புகைப்படங்களையும் வைரலாகப் பரவும் புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அது சுனில் கொடஹேனவின் குடும்பத்தினரைக் காட்டும் புகைப்படமும் அல்ல என்பது தெளிவாகின்றது.

    இதன்படி, குறித்த புகைப்படம் முழுமையாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது.


    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-21

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.