Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா என பகிரப்படும் காணொளி உண்மையா?

    2026-01-16
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா என ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is


    INTRO :

    ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா என ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.



    தகவலின்விவரம் (What is the claim):

     Facebook Link  | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “#BREAKING 🚨

    நேரடி மோதலில் #அமெரிக்கா ரஷ்யா? ஐஸ்லாந்து கடற்பரப்பில் உச்சகட்ட பதற்றம்..

    ஐஸ்லாந்து சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ரஷ்யாவின் பிரம்மாண்ட #எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன. 

    இதனால் இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே நேரடிப் #போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது.

    கடத்தப்பட்ட #மரினெரா” (பெல்லா 1)

    ஐஸ்லாந்து அருகே ரஷ்யக் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த மரினெரா” #பெல்லா 1 என்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலை அமெரிக்கப் படைகள் வழிமறித்தன இதனைத் தொடர்ந்து மிகத் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் அக்கப்பலை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

     நடுவானில் இருந்து தரையிறங்கிய கமாண்டோக்கள்

    கப்பலைப் பாதுகாப்பதற்காக ரஷ்யா ஏற்கனவே ஒரு நீர்மூழ்கிக் கப்பலை #Submarine பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்தது. இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாத அமெரிக்க விமானப்படை, அதிரடித் தாக்குதலில் இறங்கியது

     MH-6 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் அமெரிக்க கமாண்டோக்கள் கப்பலின் ‘டேங்க் டெக் Tank Deck பகுதியில் தரை இறக்கப்பட்டனர்.

     தற்போது கப்பல் முழுமையாக அமெரிக்க வீரர்களின் பிடியில் இருப்பதாகத் தெரிகிறது.

     சீறிப்பாயும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தங்கள் நாட்டு எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்ட செய்தியை அடுத்து, பாதுகாப்புக்கு அருகே இருந்த ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தற்போது அதிவேகமாக அமெரிக்கப் படைகளை நோக்கி முன்னேறி வருகின்றது.

    போர் மேகங்கள்..

    இதுவரை உக்ரைன் போர் போன்ற மறைமுக மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவும் ரஷ்யாவும், இப்போது முதன்முறையாக நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. 

    ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலுக்கும் அமெரிக்க வான்படைக்கும் இடையே மோதல் வெடித்தால் அது உலகளாவிய பெரும் போராக மாற வாய்ப்புள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    மோ.கோகுலன் “என இம் மாதம் 07 ஆம் திகதி 2026 ஆம்ஆண்டு  (07.01.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    வட அட்லாண்டிக்கில் வெனிசுவேலா எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடைய ரஷ்ய கொடி ஏந்திய கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதோடு, அதனுடன் குறித்த நடவடிக்கையினை போது எடுக்கப்பட்ட காணொளியையும் வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    BBC NEWS TAMIL 

    அமெரிக்காவின் நீதித்துறையின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது. Link 1 | Link 2

    சமூகவலைத்தளத்தில் பகிரப்படுகின்ற காணொளியும் அமெரிக்கா வெளியிட்ட காணொளியும் வெவ்வேறாக காணப்பட்டமையால், நாம் சமூகவவைத்தளத்தில் பரவுகின்ற காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    குறித்த காணொளியினை ஒத்த காட்சி அடங்கிய காணொளி கடந்த 2025 அக்டோபரில் இருந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது. குறித்த பதிவில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில், அமெரிக்க கடற்படையினர் கப்பலில் இறங்கி போர் ஒத்திகையில் ஈடுபட்ட காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. instagram

    மேலும் நாம் ஆய்வு செய்த போது குறித்த பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கிடைக்கப்பெற்றன. அதில் அமெரிக்க இராணுவத்தின் 250 வருட நிறைவு விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒத்திகை முன்னெடுப்பு என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    gettyimages

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா என பரவும் காணொளி கடந்த வருடம் (2025) அமெரிக்க இராணுவத்தின் 250 வருட நிறைவு விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையின் போது எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-01-16

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.