Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    கிராண்ட்பாஸ் தீ விபத்தின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-14
    1 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் நேற்றைய தினம் (2026.10.13) ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாக தீக்கிரையாகின. இந்த தீப்பரவலின் போது எடுக்கப்ப

    Subscribe to our WhatsApp Channel

    கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் நேற்றைய தினம் (2026.10.13) ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாக தீக்கிரையாகின. இந்த தீப்பரவலின் போது எடுக்கப்பட்டாக குறிப்பிடப்பட்ட ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

    எனவே இந்த காணொளி உண்மையான தீப்பரவல் சம்பவத்துடன் தொடர்புடைய காணொளியா என்பது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    கொழும்பு, கிராண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடுகள் வரிசையில் தீப்பரவல் என தெரிவிக்கப்பட்டு இந்த காணொளி 2026.10.26 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

    மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமையை காணமுடிந்தது.

    FB

    Fact Check (உண்மை அறிவோம்)

    கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாக தீக்கிரையாக்கியுள்ளன.


    நேற்றைய தினம் (2026.10.13) பிற்பகல் 2:15 அளவில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் இருந்த சுமார் 21 தற்காலிக வீடுகள் தீ விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


    தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், தற்போது தீப்பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் சம்பவத்தில் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. Link | Link

    Fb


    மேலும் தீப்பரவலால் ஏற்பட்ட சேதங்களையும் நிலவும் சூழ்நிலையையும் பார்வையிடுவதற்காக கொழும்பு மாநகரசபை முதல்வர் வ்ராய் கெலீ பல்தசார் சம்பவ இடத்துக்கு சென்றிருந்த காணொளியும் பிரதான ஊடக செய்திகளில் வெளியாகியிருந்தன.

    குறித்த சம்பவம் தொடர்பில் பிரதான ஊடகங்களில் வெளியான உண்மையான காணொளிகளை நாம் ஆராய்ந்த போது அதில் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி இடம்பெற்றிருக்கவில்லை. எனவே நாம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, Vay Nando Mandey என்ற பேஸ்புக் பக்கத்தில் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி கடந்த 2026.10.12 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

    ஆகவே அந்த காணொளி தொடர்பில் நாம் தொடர்ந்து ஆராய்ந்த போது, இந்தோனேசியாவின், மனடோ (Manado) நகரத்தின் சாரியோ (Sario) மாவட்டத்தில் உள்ள சாரியோ நகர்ப்புற கிராமத்தில், ஜலான் கெம்பாங் (Jalan Kembang), லோரோங் சகுரா (Lorong Sakura) பகுதியில் திங்கட்கிழமை, அக்டோபர் 12, 2026 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பல வீடுகள் தீயில் சிக்கியுள்ளதாகவும், தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், தீ விபத்துக்கான காரணம், பாதிக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டு இந்தோனேசிய ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தமையை காணமுடிந்தது.

    Link | Link

    மேலும் கிராண்ட்பாஸில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடுகளே தீக்கிரயாகியிருந்தன, அந்த வீடுகளின் உண்மையான காணொளியை நாம் பார்க்கும் போது அவற்றில் மாடி வீடுகள் இருக்கவில்லை மாறாக தனி ஒரு கட்டிட வீடுகள் மாத்திரமே தீக்கிரையாகியிருந்தமையை காணமுடிந்தது. ஆனால் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியில் இரண்டு மாடி வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டிருப்பதனை காணமுடிந்தது.

    அது மாதிரமன்றி கிராண்ட்பாஸில் தீப்பரவல் இடம்பெற்ற பகுதியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தீப்பரவல் இடமபெற்ற பகுதியும் முற்றிலும் வேறுப்பட்ட இடங்களாக காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

    இந்தோனேசியாவின் மனடோ நகர தீ விபத்தின் காணொளி மற்றும் கிராண்ட்பாஸ் தீ விபத்தின் அசல் காணொளியின் ஒப்பீடு

    பிராந்திய ஊடகவியலாளர்கள்

    மேலும் நாம் இந்த காணொளி தொடர்பில் கொழும்பு பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு வினவியபோது, இது தவறான காணொளி எனவும் கிராண்ட்பாஸில் தீ விபத்து இடம்பெற்ற பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிசை வடிவிலான வீடுகளே உள்ளதாகவும் அந்த வீடுகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

    அதேபோன்று விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனினும் விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

    கிராண்ட்பாஸ் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலினால் தீக்கிரையாகிய வீடுகளின் தற்போதைய நிலை

    கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த சுமார் 10 முதல் 15 தற்காலிக வீடுகள் (குடிசைகள்) முற்றாகத் தீக்கிரையாகின. ஒட்டுமொத்தமாக 21 முதல் 25 வீடுகள் வரை தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    விபத்தில் எந்தவித உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று பொலிஸார் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கிராண்டபாஸ் பொலிஸார் நாம் மேற்கொண்ட விசாணையின் போது குறிப்பிட்டனர்.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கொழும்பு, கிராண்ட்பாஸ் -மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் நேற்றைய தினம் (2026.10.13) ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், 15 தற்காலிக வீடுகள் முற்றாக தீக்கிரையாகிய சம்பவம் உண்மை எனினும் அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி தவறானது என்பதுடன், அந்த காணொளி இந்தோனேசியாவின், மனடோ (Manado) நகரத்தின் சாரியோ (Sario) மாவட்டத்தில் உள்ள சாரியோ நகர்ப்புற கிராமத்தில், ஜலான் கெம்பாங் (Jalan Kembang), லோரோங் சகுரா (Lorong Sakura) பகுதியில் திங்கட்கிழமை, அக்டோபர் 12, 2026 அன்று ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறிப்பட்டது.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: கிராண்ட்பாஸ் தீ விபத்தின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

    Written By: Suji Shabeedhran

    Result: Misleading

    சந்தேகத்துக்குரிய காணொளிகள் மற்றும் படங்களை சரிபார்க்க ஃபேக்ட் கிரஸண்டோவின் வாட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்புமாறு கோரும் பதாகை
    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-14

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.