Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நேபாள வெள்ளப் பேரழிவில் தாயைத் தேடி கதறும் சிறுவன் என பகிரப்படும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-01
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO  நேபாள வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரழிவில் தன் தாயைத் தேடி ஒரு சிறுவன் கதறி அழுவதனை காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நி

    Subscribe to our WhatsApp Channel

    INTRO 

    நேபாள வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரழிவில் தன் தாயைத் தேடி ஒரு சிறுவன் கதறி அழுவதனை காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.

    எனவே அந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.


    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    குறிதஅம்மா… நீ எங்கே?” — நேபாள வெள்ளப் பேரழிவில் தாயைத் தேடி கதறும் சிறுவன்; கண்கலங்க வைத்த காட்சி

    நேபாளம்: வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் பல பகுதிகளில் இருந்து வெளியாகும் காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றில், தனது தாயை காணாமல் தவிக்கும் ஒரு சிறு குழந்தை அழுது தேடும் காட்சி பலரது மனதையும் உலுக்கியுள்ளது.

    பேரழிவுக்குப் பின்னர் சேதமடைந்த பகுதியில் சிக்கியிருந்த அந்தக் குழந்தை, “அம்மா… நீ எங்கே இருக்கிறாய்?” என கதறி அழைப்பது காணப்படுகிறது. சுற்றிலும் ஏற்பட்ட அழிவும் குழப்பமும் அந்தக் குழந்தையின் அச்சத்தையும் ஏக்கத்தையும் மேலும் வெளிப்படுத்துகிறது.

    திடீர் வெள்ளப்பெருக்கு வீடுகள், சாலைகள் மற்றும் வாழ்வாதாரங்களை மட்டுமல்லாமல் பல குடும்பங்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக குடும்பத்தினரிடமிருந்து பிரிந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் மனவேதனை, இந்த பேரிடரின் மனிதாபிமான தாக்கத்தை மிகவும் வேதனையுடன் நினைவூட்டுகிறது.

    இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்றும், காணாமல் போன தனது தாயையும் குடும்பத்தினரையும் விரைவில் சந்திக்க வேண்டும் என்றும் பலர் பிரார்த்தனை தெரிவித்து வருகின்றனர்.

    இயற்கைப் பேரிடரின் மத்தியில் ஒரு குழந்தையின் அழுகை இன்று நேபாளத்தின் ஒட்டுமொத்த துயரத்தின் குரலாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவி, பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி நேற்று (2026.08.31) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

    மேலும் இந்த காணொளியை உண்மை என நினைத்து பலரும் கமென்ட் செய்திருந்ததுடன் பலரும் இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வின் முதற்கட்டமாக இந்த காணொளி தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்துள்ளனவா என்பதனை ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.

    ஆகவே நாம் இந்த காணொளியை உன்னிப்பாக கவனித்த போது அந்த காணொளியில் வழமைக்கு மாறான சில காட்சிகளை காணமுடிந்தது. மேலும் சிறுவனொருவன் பேரழிவில் சிக்கி தனது தாயை தேடி கதறி அழுதிருக்கும் காட்சியானது ஒரு சில விநாடிகள் மாத்திரமே நீடிக்கின்றது ஆனால் இந்த காணொளி உண்மை எனில் அது சில நிமிடங்களுக்கு நீடித்திருக்க வேண்டும்.

    மேலும் அந்த சிறுவனின் பின்னால் இடிபாடுகளை பார்க்கும் போது அங்கு மீட்பு பணியாளர்களோ அல்லது வேறு மனிதர்களையோ அங்கு காணமுடியவில்லை. அது மாத்திரமன்றி இவ்வளவு பொரிய கோர விபத்தின் போது அந்த சிறுவனை சுற்றி யாருமே இல்லாத பட்சத்தில் இந்த காணொளியை யார் பதிவுசெய்திருக்க முடியும், மேலும் அந்த சிறுவனின் மேல் சேறு இருப்பது இயற்கைக்கு மாறான தோற்றத்தையே காட்டுகின்றது.

    ஆகவே நாம் இந்த காணொளியை AI Detective Tool இற்கு உற்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

    நேபாள வெள்ள அனர்த்தத்தின் தற்போதைய நிலவரம்

    நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மற்றும் நுவாகோட் (Nuwakot) உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்திற்குப் பின்னர், தற்போது தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

    நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை 987 ஆக உயர்ந்துள்ளதுடன், சுமார் 3,916 பேர் காணாமல் போயுள்ளனர். 11,800-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் மண்சரிவுகள் காரணமாக மீட்புப் பணிகளில் சவால்கள் நீடிக்கின்றன. 

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….


    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நேபாள வெள்ளப் பேரழிவில் தாயைத் தேடி கதறும் சிறுவன் என பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: நேபாள வெள்ளப் பேரழிவில் தாயைத் தேடி கதறும் சிறுவன் என பகிரப்படும் காணொளி உண்மையா?

    Fact Check By: Suji Shabeedharan

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-01

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.