Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ட்ரோன் உதவியுடன் வானில் பறக்கும் சேவலின் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-10-09
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    ட்ரோன் உதவியுடன்  சேவல் ஒன்று வானில் பறப்பதனைப் போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived

    ட்ரோன் உதவியுடன்  சேவல் ஒன்று வானில் பறப்பதனைப் போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

    எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link 

    சேவல் பறக்காதுன்னு யார் சொன்னா? இப்ப பாருங்க சேவல் செய்த சாகசத்தை! இணையத்தை சூடேற்றிய இளைஞனின் செயல் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி நேற்று (2025.10.08) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

    மேலும் இதனை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்திருந்த அதேவேளை இந்த காணொளி AI தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்டது எனவும் பலர் கமென்ட் செய்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த காணொளியில் ரஷ்ய இளைஞரொருவரின் செயல் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சர்வதேச ஊடகங்களில் இது குறித்து எந்த அறிக்கையிடல்களும் வெளியாகவில்லை என்பது எமது ஆய்வில் தெரியவந்தது.

    மேலும் குறித்த காணொளியை நாம் நன்கு அவதானித்த போது, சேவல் ட்ரோன் உதவியுடன் பறக்கும் போது அதன் கால்களை மனிதர்களை போல் மேல் உயர்த்தி மடக்கும் காட்சி காணப்பட்டது. அது சற்று இயற்கைக்கு மாறாக இருந்தமையினால், இது செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. 

    எனவே குறித்த காணொளியின் புகைப்படங்களை வைத்து நாம் ஆய்வு செய்த போது, இந்த காணொளி  AI தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு இன்ஸ்டகிராமில் பகிரப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

    மேலும் இது OpenAI Sora இனால் உருவாக்கப்பட்ட காணொளி என தெரிவித்து Youtube பக்கமொன்றில் இந்த காணொளி பதிவேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    அதேபோன்று motivation solution எனும் இன்ஸ்டகிராம் பக்கத்திலும் இந்த காணொளி OpenAI Sora இனால் உருவாக்கப்பட்டது என தெரிவித்து பகிரப்பட்டிருந்தது.

    எனவே நாம் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

    எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ட்ரோன் உதவியுடன் சேவல் ஒன்று வானில் பறப்பதனை காட்டும் காணொளியானது தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்பதுவும் கண்டறியப்பட்டது.

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Avatar

    Title:ட்ரோன் உதவியுடன் வானில் பறக்கும் சேவலின் காணொளி உண்மையா?

    Fact Check By: Suji shabeedharan 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-10-09

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.