Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஹர்மன்பிரீத் கவுர் தலைகீழாக பாய்ந்து பந்தை பிடிக்கும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-16
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் போட்டியொன்றின் போது தலைகீழாக பாய்ந்து பந்தை பிடிப்பதனைப் போன்ற காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இந்த காணொளி தொடர்பான உ

    Subscribe to our WhatsApp Channel

    INTRO

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் போட்டியொன்றின் போது தலைகீழாக பாய்ந்து பந்தை பிடிப்பதனைப் போன்ற காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

    எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் அபார திறமை.. ஆண்களே நியூசிலாந்து அணியிடம் அலறும் போது இது என்ன திறமை… இது கனவா இல்ல ரோபோவா என தெரிவித்து இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது.

    மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற ஒரு கேட்ச் இதுவரை நிகழ்ந்ததில்லை.உண்மையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் இவ்வாறான ஒரு சாதனையை செய்திருப்பாராயின் அது குறித்து சர்வதேச ஊடகங்கள் உள்ளி கிரிக்கெட் செய்திகளை பிரத்தியேகமாக வழங்கும் இணையதளங்களிலும் இது குறித்து செய்திகள் வெளிவந்திருக்கவில்லை.

    மேலும் அண்மையில் இடம்பெற்ற மகளிர் போட்டிகளில் இந்திய அணி பங்குபற்றிய போட்டிகளில் இவ்வாறான ஒரு கெட்சை இந்திய அணித்தலைவர் பிடித்த காட்சிகள் உதுவும் பதிவாகவில்லை என்பதுவும் எமது ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.

    மேலும் அந்த வீடியோவை விரிவாக ஆராய்ந்தபோது, ​​அதில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்திய கிரிக்கெட் ஜெர்சியின் வலது பக்கத்தில் அடிடாஸ் சின்னமும், இடது பக்கத்தில் பிசிசிஐ சின்னமும் காணப்படுகின்றன. 

    திரையின் அடிப்பகுதியில் உள்ள ஸ்கோர்போர்டு கிராஃபிக்கை உன்னிப்பாகக் கவனித்தால், உண்மையான போட்டித் தகவல்களுக்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவு (AI) கோளாறுகளுக்கு உரியதான அர்த்தமற்ற எழுத்துக்களையும் குறியீடுகளையும் காணமுடிந்தது.  உதாரணமாக, நடுவில் “INDIA 2 v INDIA” என்றும், வலதுபுறத்தில் “NEW Zz4” போன்ற குழப்பமான எழுத்துக்களும் காட்டப்படுகின்றன.

    ஹர்மன்பிரீத் தலைகீழாக பாயும்  அசைவு, இயற்கைக்கு மாறான மிதக்கும் தன்மையைக் காட்டுகிறது. காற்றில் அவர் செலவிடும் நேரம், சுழலும்போது ஏற்படும் வேகக்குறைவு, மற்றும் பந்து திடீரெனக் கைகளுக்கு வந்து சேருவது ஆகியவை உந்தம் மற்றும் புவியீர்ப்பு விதிகளுக்கு இணங்கவில்லை. 

    சுழற்சியின் போது (0:05–0:08 வினாடிகளுக்கு இடையில்), புல் நிறைந்த பின்னணியில் ஹர்மன்பிரீத்தின் கை கால்கள் மங்கலாகவும் சிதைந்தும் காணப்படுகின்றன; இது AI வீடியோ தொகுப்புத் தொழில்நுட்பத்தில் (இடைச்செருகல்) உள்ள பிழைகள் காரணமாகும். 

    கேலரியில் உள்ள பார்வையாளர்களின் அசைவுகள் இயல்புத்தன்மையற்று இருக்கின்றன, அதேபோல, அரங்கத்தில் உள்ள விளம்பரப் பதாகைகள் உண்மையான படங்களுக்குப் பதிலாக, சிதைக்கப்பட்ட மற்றும் திரும்பத் திரும்ப வரும் வடிவங்களைக் காட்டுகின்றன.

    ஆகவே நாம் இந்த காணொளியை AI Detective Tool இற்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

    மேலும் இந்த காணொளி உண்மையான காணொளி அல்ல எனவும் இது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பதால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதனையும் எமது ஃபேக்ட் கிரஸண்டோ கேரள குழுவினர் உள்ளிட்ட பல சர்வதேச செய்தி நிறுவனங்களும் அறிக்கையிட்டிருந்தன.Link | Link

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் போட்டியொன்றின் போது தலைகீழாக பாய்ந்து பந்தை பிடிப்பதனைப் போன்ற காணொளி தகவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: ஹர்மன்பிரீத் கவுர் தலைகீழாக பாய்ந்து பந்தை பிடிக்கும் காணொளி உண்மையா?

    Fact Check By: Suji Shabeedharan

    Result: Altered

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-16

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.