Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நீரில் மூழ்கிய டெக்ஸாஸ் விமான நிலையத்தின் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-08-13
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    அமெரிக்காவின் டெக்ஸாஸ் விமான நிலையம் நீரில் முழ்கியுள்ளதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook

    அமெரிக்காவின் டெக்ஸாஸ் விமான நிலையம் நீரில் முழ்கியுள்ளதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

    எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link


    நீரில் மூழ்கியுள்ள..அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏர்போர்ட். .! என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.08.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இதன் உண்மை அறியாத பலரும் இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் கடந்த ஜுலை மாதம் பெய்த கடும் மழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து இந்த வெள்ளத்தில் பலர் உயிரிழந்தோடு பல்வேறு சேதங்களும் ஏற்பட்டன.

    எனினும் அண்மையில் அதேபோன்றதொரு மற்றுமொரு பாரிய வெள்ளப்பெருக்கு டெக்ஸாஸில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகளில் தெரிவிக்கப்படவில்லை.

    எனவே கடந்த ஜுலை மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டெக்ஸாஸ் விமான நிலையம் நீரிழ் மூழ்கியதாக தெரிவித்து மேற்குறிப்பிட்ட காணொளியானது சர்வதேச ஊடக செய்திகளில் வெளியிடப்படவில்லை என்பதுவும் எமது ஆய்வுகளின் மூலம் அறியமுடிந்தது.

    அதனால் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது shima jalal என்ற டிக்டொக் பக்கத்தில் மேற்குறிப்பிட்ட  காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததுடன் அதில் இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று என குறிப்பிடப்பட்டிருந்தமையையும் காணமுடிந்தது.

    இதன் காரணமாக நாம் குறித்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம். இதன் போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

    A screenshot of a computer

AI-generated content may be incorrect.

    எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நீரில் மூழ்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸ் விமான நிலையம் என பகிரப்படும் காணொளியானது போலியானது, என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Avatar

    Title:நீரில் மூழ்கிய டெக்ஸாஸ் விமான நிலையத்தின் காணொளி உண்மையா?

    Fact Check By: Suji Shabeedharan 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-08-13

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.