Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    95 வயது பாட்டி கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் பங்கேற்றதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-24
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO தடகளப் போட்டிகளில் 95 வயதான பாட்டி போல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் வெற்றிகரமாக பங்கேற்றியதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ

    Subscribe to our WhatsApp Channel

    INTRO

    தடகளப் போட்டிகளில் 95 வயதான பாட்டி போல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் வெற்றிகரமாக பங்கேற்றியதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.

    இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    வயதானாலும் தளராத சுப்பர் பவர் லேடி | 95 வயதிலும் பாட்டியின் அபார திறமை! என தெரிவித்து குறித்த காணொளி கடந்த 2026.09.10 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    மேற்குறிப்பிட்ட காணொளியில் குறித்த போட்டி எங்கு நடைபெற்றது, எவ்வாறான போட்டி என்ற எந்த விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

    இத்தகைய அசாதாரண சாதனை உண்மையில் இடம்பெற்றிருந்தால், அது தடகள அமைப்புகள், விளையாட்டு ஊடகங்கள் அல்லது செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்திருக்க வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ போட்டி முடிவுகள், புகைப்படங்கள், வீராங்கனையின் சுயவிவரம், நேர்காணல்கள் அல்லது போட்டி ஏற்பாட்டாளர்களின் தகவல்கள் போன்ற எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

    மேலும் நாம் இந்த காணொளி தொடர்பில்  தொடர்ந்து ஆராய்ந்த போது, Senior Salute என்ற பேஸ்புக் பக்கத்திலும் காணப்பட்டது. அந்தப் பக்கம் தன்னை AI உள்ளடக்கத்தை உருவாக்கும் பக்கமாக குறிப்பிடுகிறது.

    மேலும், செப்டம்பர் 8ஆம் திகதி அந்தப் பக்கத்தில் குறித்த காணொளி பதிவேற்றப்பட்டிருந்ததுடன், அதில் இந்த காணொளி  AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் என்ற அடையாளமும் இடம்பெற்றிருந்ததனை காணமுடிந்தது.

    Facebook

    அந்தக் கணக்கில் வயதானவர்கள் வழக்கத்திற்கு மாறான மற்றும் அசாதாரணமான உடல் செயல்பாடுகளைச் செய்வது போன்ற பல   AI மூலம் உருவாக்கப்பட்ட காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    AI காணொளி ஒன்றை அதன் ஆரம்பப் பதிவிலிருந்து பதிவிறக்கம் செய்து மற்றொரு கணக்கு மீண்டும் பதிவேற்றும்போது, அதனுடன் இருந்த AI குறிச்சொல் காணாமல் போகலாம். பின்னர் புதிய விளக்கத்துடன் அது மீண்டும் பகிரப்பட்டு, முற்றிலும் வேறு பார்வையாளர்களிடம் உண்மையான சம்பவமாகக் காட்டப்படலாம்.

    மேலதிகமாக நாம் இந்த காணொளியை AI detection கருவிகளை பயன்படுத்தி ஆய்வு செய்த போது இந்த காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

    உண்மையான வயதான விளையாட்டு வீரர்கள்

    அமெரிக்காவின் Masters தடகள வீராங்கனை Flo Meiler, தனது 90களிலும் தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.கோல் ஊன்றிப் பாய்தல், விரைவோட்டம், தடை தாண்டும் ஓட்டம் (Pole Vault, sprinting, hurdles,throwing) போன்ற பல்வேறு போட்டிகளில் அவர் பங்கேற்றதுடன், Masters Athletics போட்டிகளில் சாதனைகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.Link

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் 95 வயது பாட்டி கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் வெற்றிகரமாக பங்குப்பற்றியதாக தெரிவித்து பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன், அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.

     இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: 95 வயது பாட்டி கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் பங்கேற்றதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

    Fact Check By: Suji Shabeedharan

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-24

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.