Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    இலங்கையில் மீண்டும் வெள்ளம் மற்றும் மண்சரிவு என பகிரப்படும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-19
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் மீண்டும் வெள்ளம் மற்றும் மண்சரிவு என காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடி

    Subscribe to our WhatsApp Channel

    நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் மீண்டும் வெள்ளம் மற்றும் மண்சரிவு என காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

    எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    மீண்டும் வெள்ளப் பெருக்கு மண்சரிவு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என தெரிவித்து இந்த காணொளி 2026.10.15 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    மேற்குறிப்பிட்ட காணொளியானது கடந்த 2026.10.15 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமையினால் நாம் 15 ஆம் திகதி இலங்கையின் காலநிலை முன்னெச்சரிக்கைகள் எவ்வாறு இருந்தது என்பதனை ஆராய்தோம்.

    அதனடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும்

    மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்டது,

    மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை எதிர்பார்க்கப்பட்டது எனவும் இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்தது. Link

    மேலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), ஒக்டோபர் 15ஆம் திகதி இரவு 9 மணிக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தது.

    இந்த எச்சரிக்கை ஒக்டோபர் 15 இரவு 9 மணி முதல் ஒக்டோபர் 16 இரவு 9 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.

    எச்சரிக்கை நிலை 2 – அவதானமாக இருக்க வேண்டிய பகுதிகள்

    மாவட்டம்பிரதேசங்கள்
    நுவரெலியாமதுரட்ட, வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன
    இரத்தினபுரிஎலபாத்த
    கேகாலைபுலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்ல
    குருநாகல்ரிதீகம
    மாத்தளைரத்தோட்ட
    மாத்தறைகொட்டபொல, பிட்டபெத்தர, ஹக்மன, பஸ்கொட

    இந்தப் பகுதிகளுக்கு நிலை 2 மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஒக்டோபர் 15ஆம் திகதி இரவு வெளியான அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட பிரதான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருக்க வேண்டிய பகுதிகள்

    கீழ்க்காணும் மாவட்டங்களின் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கும் நிலை 1 எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    • காலி
    • கம்பஹா
    • அம்பாந்தோட்டை
    • களுத்துறை
    • கேகாலை
    • மாத்தறை
    • கண்டி
    • மாத்தளை
    • இரத்தினபுரி
    • குருநாகல்

    இவை மாவட்டம் முழுவதற்குமான எச்சரிக்கைகள் அல்ல, குறிப்பிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கானவை.

    ஒக்டோபர் 15ஆம் திகதி வெள்ளப்பெருக்கு நிலைமை

    ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியான செய்திகளின்படி, நாட்டின் சில ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்திருந்தது.

    ஆறு / பகுதிநிலைமை
    நில்வளா கங்கை – தல்கஹகொடசிறிய அளவிலான வெள்ள நிலை
    குடா கங்கை – மில்லகந்தஎச்சரிக்கை நீர்மட்டம்
    நில்வளா கங்கை – பனடுகமஎச்சரிக்கை நீர்மட்டம்
    அத்தனகலு ஓயா – துனமாலஎச்சரிக்கை நீர்மட்டம்

    மேலும், அன்றைய தினம் காலை 10 மணி வரையான 24 மணிநேரத்தில் கெக்கிராவ பகுதியில் 127.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

    ஒக்டோபர் 15ஆம் திகதிக்கான அதிகாரப்பூர்வ அறிக்கைகள்

    அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) இணையதளத்தில் பின்வரும் அறிக்கைகள் பதிவாகியுள்ளன.

    நேரம்அறிக்கை
    காலை 5.30காலநிலை முன்னறிவிப்பு
    காலை 10.00அனர்த்த நிலைமை அறிக்கை
    காலை 11.00கடுமையான மின்னல் எச்சரிக்கை
    பிற்பகல் 3.00கடும் மழைக்கான அறிவுறுத்தல்
    பிற்பகல் 4.00மண்சரிவு அபாய எச்சரிக்கை
    பிற்பகல் 4.00காலநிலை முன்னறிவிப்பு
    மாலை 6.00நில்வளா கங்கை வெள்ள அபாய எச்சரிக்கை
    இரவு 9.00புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

    எனினும் மேற்குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் செய்திகளில் இலங்கையில் கடந்த 15 ஆம் திகதி மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தாலும், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் மீண்டும் பாரியளவிலான மண்சரிவு ஏற்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. என்பதுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகளும் வெளியாகியிருக்கவில்லை.

    ஆகவே நாம் குறித்த காணொளியை நன்கு அவதானித்த போது அந்த காணொளியானது இரண்டு வெவ்வேறு காணொளிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள காணொளி என்பதனை அறியமுடிந்தது.

    அதனடிப்படையில் அதன் முதலாவது காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது அந்த காணொளியானது 2025 ஆம் ஆண்டு தித்வா புயல் ஏற்பட்ட காலத்தில் டிசம்பர் 02 ஆம் திகதி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

    உலப்பனையில் உள்ள கடோல் பொக்குவ பகுதியில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகள் மற்றும் வீதிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது.

    மேலும் சமூக ஊடங்களில் பகிரப்பட்ட அதே காணொளியில் உள்ள சேதம் இடம்பெற்ற பகுதியானது வேறு கோணத்தில் இருந்து காட்சிப்படுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தமையையும் காணமுடிந்தது.

    மேலும் சமூக ஊடங்களில் பகிரப்படும் காணொளி மற்றும் 2025 ஆம் ஆண்டு தித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவின் காணொளி இரண்டும் ஒன்று என்பதனை பின்வரும் படத்தின் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

    பகிரப்பட்ட காணொளி மற்றும் 2025 தித்வா புயலின் போது எடுக்கப்பட்ட அசல் மண்சரிவு காணொளியின் ஒப்பீடு

    அதேபோன்று நாம் இரண்டாவதாக இணைக்கப்பட்ட காணொளி தொடர்பில் ஆராய்வை மேற்கொண்ட போது அந்த காணொளியும் 2025 ஆம்ஆண்டு தித்வா புயல் தாக்கம் காணரமாக ஹுன்னஸ்கிரிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் காணொளி என்பதனை அறியமுடிந்ததுடன், இந்த காணொளியும் 2025 ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதியே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமையையும் அறியமுடிந்தது.

    அதனடிப்படையில் நாம் பார்க்கும் போது கடந்த 15 ஆம் மீண்டும் இலங்கையில் மண்சரிவு என தெரிவித்து பகிரப்பட்ட காணொளியானது 2025 ஆம் தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவின் போது எடுக்கப்பட்ட காணொளியாகும்

    இலங்கையின் தற்போதைய காலநிலை நிலவரம்

    இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

    வளிமண்டலவியல் திணைக்களத்தின் 2026 ஒக்டோபர் 18ஆம் திகதிக்கான காலநிலை முன்னறிவிப்பு

    2026 ஒக்டோபர் 17ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

    சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

    மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

    இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும்.

    மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

    தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஒக்டோபர் 16ஆம் திகதி வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிக்கையின்படி, ஒக்டோபர் 17ஆம் திகதி பிற்பகல் 4 மணி வரையான காலப்பகுதியில் பின்வரும் மாவட்டங்களின் குறிப்பிட்ட பிரதேசங்கள் அபாய எச்சரிக்கையின் கீழ் இருந்தன.

    மாவட்டம்எச்சரிக்கை நிலை
    இரத்தினபுரிநிலை 1 மற்றும் 2
    கேகாலைநிலை 1 மற்றும் 2
    மாத்தளைநிலை 1 மற்றும் 2
    நுவரெலியாநிலை 1 மற்றும் 2
    பதுளைநிலை 1
    கண்டிநிலை 1
    களுத்துறைநிலை 1
    குருநாகல்நிலை 1

    அதனடிப்படையில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நிலை 2 எச்சரிக்கையும் மேலும் 29 பிரிவுகளுக்கு நிலை 1 எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தன.

    இது ஒக்டோபர் 17 பிற்பகல் 4 மணி வரையான எச்சரிக்கை நிலை மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு மண்சரிவு என தெரிவித்து பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன் அந்த காணொளியானது 2025 ஆம் ஆண்டு இலங்கையில் இலங்கையை தாக்கிய தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

    அதேவேளை மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி 2025 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய காணொளியாக இருந்தாலும், நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழைக் காரணமாக சாதாரண அளவிலான நீர் பெருக்கெடுத்தும் ஓடும் நிலைகளும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.