Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    துபாயில் கடும் வெள்ளம் என பகிரப்பட்ட காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-26
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO துபாயில் கடும் வெள்ளம் என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is

    Subscribe to our WhatsApp Channel


    INTRO

    துபாயில் கடும் வெள்ளம் என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.

    எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):


    Facebook | Archived Link

    குறித்த பதிவில் நேற்று துபாயில் கொட்டித்தீர்த்த கனமழை! 

    செப்டம்பர் 20, 2026 அன்று துபாயின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

    கனமழை காரணமாக சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், வாகன ஓட்டிகளுக்கு பார்வைத்திறனும் குறைந்தது.

    கனமழையின் போது துபாய் நகரின் நிலை எப்படி இருந்தது என்பதை இந்த காட்சிகள் காட்டுகின்றன. 

    துபாயில் இருப்பவர்கள் கனமழையின் போது வாகனங்களை கவனமாக இயக்கவும். தண்ணீர் தேங்கிய சாலைகளை தவிர்த்து, முன்னால் செல்லும் வாகனங்களிடம் பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்கவும்.

    மேலும் இதுபோன்ற செய்திகளை முதலில் அறிய Follow @southline_global என தெரிவிக்கப்பட்டு கடந்த 2026.09.21 ஆம் பகிரப்பட்டிருந்தது.


    மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    கடந்த 2026.09.20 ஆம் திகதி துபாயில் பல பகுதிகளில் கனமழை பெய்ததாகவோ அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவோ தெரிவிக்கப்பட்ட செய்திகள் ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாகக் கொண்ட பிரதான ஊடகங்களிலோ அல்லது சர்வதேச ஊடகங்களிலோ செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் காணமுடியவில்லை.

    இருப்பினும் கடந்த மாதங்களில் துபாயில் ஏற்பட்ட கடும் வெள்ளம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன ஆனால் அவற்றில் இந்த வெள்ளக் காட்சிகளை காணமுடியவில்லை.Link | Link

    மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியை நாம் அவதானித்த போது அதில் சில விற்பனை நிலையங்களின் பெயர்கள் கொரிய மொழியில் இருப்பதனை அவதானிக்க முடிந்தது.

    எனவே நாம் இந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம். இதன்போது கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த காணொளி இணையத்தில் பகிரப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

    மேலும் அந்த காணொளி தொடர்பில் நாம் தொடர்ந்து ஆராய்ந்த போது, தென் கொரியாவின் ஜாங்பியோங்-டாங் மற்றும் கோஹியோன்-டாங் பகுதிகளில் கடும் வெள்ளம் எனவும் மணிக்கு 100 மி.மீ-க்கும் அதிகமான பேரிடர் அளவிலான கனமழையால் இப்பகுதிகளில் உள்ள சாலைகள் நீரில் மூழ்கின இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்று நீர் பெருக்கெடுத்தல் மற்றும் நீர்த்தேக்கங்களால் ஏற்படும் அபாயங்கள்: கோஹியோன் ஓடையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால் கடும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது, மேலும், முண்டோங் நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் அபாயம் மற்றும் குச்சியோன், யோன்சோ அணைகளிலிருந்து நீர் வெளியேற்றப்படவுள்ள சூழல் காரணமாக அப்பகுதி மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட உத்தரவிடப்பட்டது என குறிப்பிடப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது.

    மேலும் தென்கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பில் தென்கொரியாவின் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. Link | Link 

    துபாயில் வசிக்கும் இலங்கையர்கள்

    மேற்குறிப்பிட்ட காணொளயில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று கடந்த 20 ஆம் திகதி துபாயில் பெய்த கன மழையினால் வெள்ளம் ஏற்பட்டதா என நாம் துபாயில் இருக்கும் சில இலங்கையர்களை தொடர்புகொண்டு வினவிய போது, சாதாரணமாக துபாயில் சற்று அதிகமாக மழைபெய்தாலும் வெள்ளம் ஏற்படும் என அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் தற்போது துபாயில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாகவே அவர்கள் குறிப்பிட்டனர். அது மாத்திரமன்றி மேற்குறிப்பிட்ட காணொளி துபாயில் ஏற்பட்ட வெள்ளத்தின் காணொளி அல்ல எனவும் கடந்த 20 ஆம் திகதி அவ்வாறு வெள்ளம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

    கடந்த 20 ஆம் திகதி துபாயில் நிலவிய காலநிலை

    செப்டம்பர் 20, 2026 அன்று துபாயில் வானிலை மிகவும் வெப்பமாக இருந்துள்ளது. கிடைக்கக்கூடிய வானிலைப் பதிவின்படி, அன்று அதிகபட்ச வெப்பநிலை சுமார் 42.8°C (109°F) ஆகவும், குறைந்தபட்சம் 30°C (86°F) ஆகவும் பதிவாகியுள்ளது. மழைப்பொழிவு பதிவாகவில்லை.

    அன்றைய UAE வானிலை முன்னறிவிப்பிலும் துபாயில் அதிகபட்சம் 42°C வரை வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வானம் பொதுவாக தெளிவாக இருந்து, சில பகுதிகளில் ஓரளவு மேகமூட்டம் காணப்படலாம் என்றும், காற்று மணிக்கு சுமார் 10–20 கி.மீ வேகத்தில் வீசும் என்றும் குறிப்பிடப்பட்டது.

    2026 செப்டம்பர் 20 அன்று துபாயில் கடும் வெப்பமான வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 42°C முதல் 43°C வரை பதிவான நிலையில், மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை. பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருந்ததுடன், காற்று மிதமான வேகத்தில் வீசியுள்ளது. Link | Link | Link 

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube


    Conclusion: முடிவு


    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கடந்த 2026.09.20 ஆம் திகதி துபாயில் துபாயில் கன மழை காரணமான கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பகிரப்பட்ட காணொளி தவறானது என்பதுடன் அந்த காணொளி தென் கொரியாவில் பெய்யத கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

     இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: துபாயில் கடும் வெள்ளம் என பகிரப்பட்ட காணொளி உண்மையா?

    Written By: Suji Shabeedharan

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-26

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.