Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய – சீனா இராணுவம் மோதல் என பரவும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-29
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய – சீன நாட்டு இராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் என்று ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook I Archiv

    அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய – சீன நாட்டு இராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் என்று ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின் விவரம் (What is the claim):

    அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய - சீன இராணுவம் மோதுவதாகக் கூறி முகநூலில் பகிரப்பட்ட இராணுவ வீரர்களின் காணொளியின் ஸ்கிரீன்ஷாட்

    Facebook I Archive

    ஃபேஸ்புக்கில் ராணுவ வீரர்கள் பின்வாங்கிச் செல்லுவது போன்று வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் குறித்த பதிவில், “அருணாசலப் பிரதேச எல்லையில் தொடரும் பதற்றம்: நவீனத் தொழில்நுட்பத்துடன் தயாராகும் ITBP அருணாசலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள இந்திய – சீன எல்லைப் பகுதிகளில், சீன ராணுவத்தினருடனான உரசல் நிலைகள் (Confrontations) பல இடங்களில் தொடர்வதாக இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் (ITBP) தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக அருணாசலப் பிரதேசம் இருந்து வரும் வேளையில், சீனா அப் பகுதியை “சாங்னான்” (Zangnan) அல்லது “தெற்கு திபெத்” எனக் கூறி உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், எல்லைப் பகுதியில் நிலவும் சவாலான சூழ்நிலைகளைக் கையாள்வதில் ITBP-ன் சிறப்புப் பிரிவான ‘ஷௌர்யா’ (Shaurya) கமாண்டோக்களின் பங்கு மிக முக்கியமானது என சத்ருஜீத் கபூர் சுட்டிக்காட்டினார். மேலும், படையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் வகையில், நவீன உபகரணங்கள், மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அதிகளவிலான ட்ரோன்களைப் (Drones) பயன்படுத்துவதற்கான தீவிர திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த காணொளியை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கூற்று:

    எனவே குறித்த பதிவில் கூறப்பட்டதனைப் போன்று “அருணாசலப் பிரதேச எல்லையில் தொடரும் பதற்றம்: நவீனத் தொழில்நுட்பத்துடன் தயாராகும் ITBP என பகிரப்பட்ட காணொளி உண்மையா என்பதுவே இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தையே சீனா தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. சமீபத்தில் பேட்டி அளித்த இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் (டி.ஜி.) சத்ருகன் கபூர், “கடந்த சில நாட்களாக அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் இரு தரப்பினரும் (இந்தியா மற்றும் சீனா) நேருக்கு நேர் மோதும் நிலை உருவானது. இந்த நிலைமை இன்னும் தொடர்கிறது” என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில், சீன இராணுவம் தாக்குதல் நடத்துவது போன்ற காணொளியுடன் சத்ருகன் கபூர் பேட்டியில் கூறிய விடயங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதைப் பார்க்கும் போது எல்லையில் இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவத்தின் காணொளியே என்ற தோற்றத்தை இது உருவாக்குகிறது.

    ஆனால் குறித்த காணொளியில் உள்ள இராணுவ வீரர்களைப் பார்க்கும் போது அவர்கள் இந்தியா அல்லது சீனாவைச் சார்ந்தவர்கள் என்பது போல இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

    இராணுவ வீரர்கள் இருவர் காணப்படும் ரஷ்ய மொழிப் பதிவு கொண்ட அசல் காணொளிப் பதிவின் ஸ்கிரீன்ஷாட்

    உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive

    வைரலாகும் காணொளியின் காட்சிகள் அசல் காணொளியுடன் முழுமையாகப் பொருந்துகின்றன

    வைரலாகப் பரவும் காணொளியையும் அசல் காணொளியையும் ஒவ்வொரு காட்சியாக ஒப்பிட்டு ஆய்வு செய்தோம்.

    வைரலாகும் காணொளியின் 12ஆவது விநாடியிலும், இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அசல் காணொளியின் 12ஆவது விநாடியிலும் ஒரே மாதிரியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    துப்பாக்கியை உயர்த்திப் பிடித்தவாறு முழங்காலில் அமர்ந்திருக்கும் அதே இராணுவ வீரர், பின்னணியில் காணப்படும் அதே பாறை மற்றும் கற்கள் நிறைந்த அதே பாதை ஆகியவை இரண்டு காணொளிகளிலும் ஒரே மாதிரியாகக் காணப்படுகின்றன.

    எனினும், வைரலாகப் பரவும் காணொளி அசல் காணொளியைவிட இருண்டதாகவும் குறைந்த தரத்திலும் காணப்படுகிறது. மேலும், காணொளியின் கீழ்ப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுப் பரிமாற்றம் இடம்பெறுவதாகக் குறிப்பிடும் “fire exchanges” என்ற வாசகத்துடன் கூடிய கறுப்பு நிறப் பட்டையொன்றும் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

    வைரலான காணொளியின் காட்சியும் 28 ஜூலை அசல் இன்ஸ்டாகிராம் காணொளியின் காட்சியும் ஒன்றே என ஒப்பிடும் படம்

    எனவே குறித்த காணொளியின் காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சில மாதங்களாகவே இந்த காணொளியை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது கஜகஸ்தான் இராணுவத்தின் tactical_federation என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ ஜூலை 28ஆம் திகதி பதிவிடப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம்.

    அதில், “ஜார்கென்ட் (Zharkent) நகரில் உள்ள பயிற்சித் தளத்தில், கஜகஸ்தான் இராணுவ வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டது” என்பது போல குறிப்பிட்டிருந்தனர். அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே போன்று ஏராளமான காணொளிகள் வெளியாகி இருந்தன. இதன் மூலம் இந்த காணொளி கஜகஸ்தான் இராணுவ வீரர்களுடையது என்பது உறுதியானது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள காணொளி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

    இந்தியா–சீனா எல்லை தொடர்பான காணொளிகளைப் பகிரும்போது இலங்கை வாசகர்கள் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

    இலங்கை தனது அண்டை நாடுகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வருகிறது.

    2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கைப் பிரதேசத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தியை இங்கே காணலாம்.

    இவ்வாறான சூழலில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் இடம்பெறுவதாகக் கூறும் தகவல்கள் இலங்கையின் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவக்கூடும்.

    இலங்கையில் பகிரப்பட்டுள்ள குறித்த பதிவும் தவறான தகவல்கள் பரப்பப்படும் பொதுவான முறையை எடுத்துக்காட்டுகிறது. அதாவது, உண்மையான செய்தியின் சுருக்கமான விளக்கத்துடன் தொடர்பில்லாத காணொளி இணைக்கப்பட்டு, திரையில் அதைவிடப் பரபரப்பான கூற்று முன்வைக்கப்படுகிறது.

    எனவே, இவ்வாறான காணொளிகளைப் பகிர்வதற்கு முன்பு, அவற்றை முதலில் வெளியிட்டவர் யார், எப்போது வெளியிடப்பட்டது, காணொளியில் இடம்பெறும் இராணுவச் சீருடைகள், நிலப்பரப்பு மற்றும் மொழி ஆகியவை கூறப்படும் சம்பவத்துடன் பொருந்துகின்றனவா என்பதைச் சரிபார்ப்பது அவசியமாகும்.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் மோதல் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி தவறானது என்பதுடன் அது கஜகஸ்தான் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட போர் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    FCT

    Fact Crescendo Team

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-29

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.