மீசையுடன் பிறந்த அதிசயக் குழந்தை என தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

மேற்குறிப்பிட்டப திவில் மீசையுடன் ஈக்வடோரில் அதிசயக் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு 2026.10.24 ஆம் திகதி குறித்த பதிவு பகிரப்பட்டிருந்தது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கூற்று
எனவே மேற்குறிப்பட்ட பதிவில் தெரிவிக்கப்படுவதனைப் போன்று மீசையுடன் அதிசயக் குழந்தையொன்று உண்மையில் ஈக்குவடோர் நாட்டில் பிறந்துள்ளதா என்பதனையே ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வுக்குட்படுத்தி விளக்கியுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
உலகின் எந்த பகுதியாக இருந்தாலும் உண்மையில் மீசையுடன் சற்று வளர்ந்த மனிதனின் முகசாயலில் ஒரு குழந்தை பிறந்திருந்தால் அது தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செயதிகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
மேலும் நாம் இது குறித்து தொடர்ந்து ஆராய்ந்த போது, சில செய்திகளில் இந்த காணொளி தொழிநுட்ப ரீதியில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.Link | Link
குழந்தையின் மேல் உதட்டிலும் கன்னங்களிலும் முடியுடன் இருக்கும் இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய சந்தேகங்களை எழுப்பியது. 2026 அக்டோபர் 23 அன்று ஈக்வடார் செய்தி தளங்கள் இதைப் பகிர்ந்தன. காணொளி ஒரு மருத்துவமனை போன்ற இடத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் காணொளியின் மூலம் குறித்தோ, இது உண்மையான சம்பவமா என்பது குறித்தோ இதுவரை சுயாதீன உறுதிப்படுத்தல் இல்லை என்று ஈக்வடோரின் மெட்ரோ ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தையின் பெயர், பெற்றோர், மருத்துவமனை, நகரம் என எதுவும் எந்த அறிக்கையிலும் இல்லை. “ஈக்வடோர்” என்பது குறித்த காணொளியை பகிர்ந்தவர்கள் தெரிவித்தது மாத்திரமே தவிர இதை நிரூபிக்கும் எந்தத் தரவும் இல்லை.
AI சந்தேகத்திற்கான காரணங்கள்
குழந்தை அசையும்போது மீசை சரியாகப் பொருந்தாமல் விலகுவது போன்ற AI எடிட்டிங் அறிகுறிகள் இருக்கின்றமை.
மீசை “கருப்பாக, தடிமனாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது போல” இருப்பது இயற்கையாக பிறந்த குழந்தையின் முடியிலிருந்து வேறுபடுகின்றமையை காணமுடிகின்றது.
எனவே நாம் இந்த காணொளியை AI Detective Tool இற்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது மீசையுடன் பிறந்த குழந்தை என பகிரப்படும் காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.


குழந்தை மருத்துவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவ நிபுணர் சஞ்சீவ தென்னகோன்
மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் காணொளியில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று அடர்த்தியான கருப்பு நிற மீசையுடன் குழந்தை ஒன்று பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது தொடர்பில், குழந்தை மருத்துவர் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவ நிபுணர் சஞ்சீவ தென்னகோனிடம் நாம் வினவினோம்.
இதன்போது, குறித்த காணொளியில் காணப்படுவதைப் போன்று அடர்த்தியான கருப்பு நிற மீசை, புதிதாகப் பிறந்த குழந்தையின் இயல்பான முடி வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் காணப்படும் என எதிர்பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், லானுகோ (Lanugo) என அழைக்கப்படும் மெல்லிய, மென்மையான முடிகள் குழந்தை வளர்ச்சியடையும்போது பொதுவாக உதிர்ந்துவிடும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
அத்துடன், சில சந்தர்ப்பங்களில் மெலனோசைட்டிக் திட்டுகள் (Melanocytic patches) என அழைக்கப்படும் சிறிய கருமையான நிறத் திட்டுகள் அல்லது அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில முடிகள் காணப்படக்கூடும். எனினும், காணொளியில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற அடர்த்தியான முடி வளர்ச்சியை இத்தகைய நிலைமைகளின் அடிப்படையில் விளக்க முடியாது என்றும் மருத்துவ நிபுணர் சுட்டிக்காட்டினார்.
மேலதிக தகவல்: குழந்தைகள் மீசையுடன் பிறக்க சாத்தியங்கள் உண்டா?
லானுகோ (Lanugo): மிகவும் பொதுவான காரணம்
கருவில் 5-6 மாதங்களில் குழந்தையின் உடலில் மிக மெல்லிய, மென்மையான முடி வளரும். இதன் பெயர் லானுகோ. இது பொதுவாகப் பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு (33-36 வாரங்களில்) முன்பே உதிர்ந்துவிடும். குறைமாதக் குழந்தைகளில் இது முகம், தோள்கள், முதுகு, காதுகளில் தங்கியிருக்கலாம். பிறகு சில வாரங்களில் தானாக மறைந்துவிடும். இந்த எஞ்சிய லானுகோதான் சில குழந்தைகளுக்கு “மீசை” போன்ற தோற்றத்தைத் தரலாம். ஆனால் இது மென்மையாகவும் மங்கலாகவும் இருக்கும். தடிமனான, வடிவான மீசை போல இருக்காது. Iink | link
2. பிறவி ஹைபர்டிரைக்கோசிஸ் (Congenital Hypertrichosis)
இது மிக அரிதான மரபணு நிலையாகும், உடலிலும் முகத்திலும் அளவுக்கு அதிகமான முடி வளரும். சில வகைகளில் பிறக்கும்போதே முகம் முழுவதும் முடி இருக்கும். இது உலகளவில் மிகச் சில குடும்பங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்நிலை உறுதியானால் மரபணுப் பரிசோதனை மற்றும் மருத்துவ மதிப்பீடு தேவைப்படும். Link
3. மரபணு நோய்க்குறிகளுடன் தொடர்புடைய அதிக முடி
கொர்னேலியா டி லாங்கே நோய்க்குறி (Cornelia de Lange syndrome) போன்ற சில மரபணு நோய்க்குறிகளில் புருவம், நெற்றி, முதுகு போன்ற இடங்களில் அதிக முடி காணப்படலாம். இதில் முடி மட்டும் அல்ல, வளர்ச்சி மற்றும் உடல் அமைப்பு சார்ந்த பிற அறிகுறிகளும் இருக்கும்.
4. கர்ப்பகால மருந்துகள் மற்றும் ஹோர்மோன்கள்
கர்ப்ப காலத்தில் தாய் எடுத்துக்கொண்ட சில மருந்துகள் (உதாரணம் – ஃபீனிடாய்ன், மினாக்சிடில்) குழந்தையின் முடி வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்று மருத்துவ கோட்பாடுகள் குறிப்பிட்டாலும், அது அரிதான நடைமுறை எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
5. இயல்பாகவே அடர்த்தியான முடி
சில குழந்தைகள் தலையில் அடர்த்தியான முடியுடன் பிறப்பது இயல்பே. உதாரணமாக, அயர்லாந்தில் ஒரு குழந்தை கருவில் இருக்கும்போதே அடர்த்தியான கருப்பு முடியுடன் இருந்தது அல்ட்ராசவுண்டில் தெரிந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு தலைமுடி மாத்திரமே அப்படி அடர்த்தியாக இருந்துள்ளது மீசை அல்ல.
(இந்த தகவல்கள் பொது மருத்துவ அறிவின் அடிப்படையிலானது. தனிப்பட்ட நோயறிதலுக்கு மருத்துவரை அணுகவும்.)
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் மீசையுடன் பிறந்த அதிசயக் குழந்தை என பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
அதேபோன்று மருத்துவ ரீதியாக லானுகோ, ஹைபர்டிரைக்கோசிஸ் போன்றவற்றால் குழந்தையின் முகத்தில் முடி இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் உள்ளதனை போன்று ஒரு நேர்த்தியான, முழு வளர்ச்சியடைந்த ஆணின் மீசை போன்ற தோற்றத்தைத் தருவது மிகவும் அரிது என்பதுவும் வைத்தியர்கள் மற்றும் வைத்திய ஆராய்ச்சி அறிக்கைகளின் தகவல்களின் ஊடாக தெளிவாகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


