Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளதா லோர்ட்ஸ் மைதானம்…?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-12-05
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO:  பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ள இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானம் என சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என

    INTRO:  
    பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ள இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானம் என சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link  | Archived Link

    சமூக வலைத்தளங்களில் “#SportsUpdate | பனிப்பொழிவால் மூடப்பட்டு கண்ணைக் கவரும் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானம்..!!

    #TamilFM | #lordscricketground | #snowfall | #happydecember ”இம் மாதம் 04 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (04.12.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    முதலில் நாம் இந்த நாட்களில் இங்கிலாந்தில் லோர்ட்ஸ் மைதானம் அமைந்துள்ள St John’s Wood Rd, London NW8 8QN இல் வானிலை நிலையை முதலில் சரிபார்த்தோம்.

    Accuweather இன்றைய (டிசம்பர் 6) வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக காற்றின் வெப்பநிலை 0°C (32°F) அல்லது குறைவாக இருக்கும் போது பனி ஏற்படுகிறது, மேலும் இங்கு காற்றின் வெப்பநிலை 12°C ஐக் காட்டுகிறது, எனவே இது பனிப்பொழிவு காலநிலை அல்ல என்பது தெளிவாகிறது.

    இன்றைய தினம் (06) லண்டனில் உள்ள காலநிலை link | BBC Weather | metoffice.gov.uk

    ஆகவே சமூகவலைத்தளங்களில் லோர்ட்ஸ் மைதானத்தில் பனிப்பொழிவு என பகிரப்பட்டு வருகின்ற புகைப்படங்களை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    அதில் பிப்ரவரி 1991 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்

    Gettyimages

    ஜனவரி 2023 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்

    Gettyimages

    ஜனவரி 2003 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்

    Gettyimages

    மேலும், ஐக்கிய இராச்சியத்தின் லண்டனில் உள்ள லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த சில நபர்களிடம் விசாரித்தோம், அவர்கள் பனிப்பொழிவு இரண்டு வாரங்களுக்கு முன்பு முடிவடைந்ததையும், டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் மீண்டும் பனிப்பொழிவு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பதாக அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.

    மேலும், லண்டன் லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் (04.12.2024) எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதள பயனாளிகள் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது, அவர்களிடம் நாம் மேற்கொண்ட விசாரணையில், லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மேற்குறிப்பிட்ட புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ளவாறு பனிப்பொழிவு இல்லை என்று உறுதி செய்தனர்.

    Facebook | Archived Link

    கடந்த 2 ஆம் திகதி (02.12.2024) லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படங்கள் அடங்கிய மற்றொரு பதிவு கீழே உள்ளது.

    Facebook | Archived Link

    பனிப்பொழிவு இன்றி மிகவும் தெளிவாக இருந்த மைதானத்தின் வீடியோவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் ஊடக பேச்சாளர்

    இதுகுறித்து லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் ஊடக பேச்சாளர் Adam Matthews இனை விசாரித்தபோது, இவை பழைய புகைப்படங்கள், தற்போதைய புகைப்படங்கள் அல்ல என்று எமக்கு உறுதி செய்தார்.

    அதன்படி, லண்டனில் உள்ள லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் தற்போதைய நிலை என பகிரப்படும் புகைப்படங்கள் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பனிப்பொழிவின் போது எடுக்கப்பட்டவை என தெளிவாகத் தெரிகிறது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளதா லோர்ட்ஸ் மைதானம் என பகிரப்படும் தகவல் தவறானது என்று  கண்டறியப்பட்டது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளதா லோர்ட்ஸ் மைதானம்…?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-12-05

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.