Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நேபாளத்தில் வெள்ள நீர் வற்றிய பின்னர் தென்பட்ட உடல்களை காட்டு காணொளியா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-03
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO  நேபாளத்தில் வெள்ள நீர் வற்றியப் பின்னர் தென்பட்ட மனித உடல்கள் என குறிப்பிட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை

    Subscribe to our WhatsApp Channel

    INTRO 

    நேபாளத்தில் வெள்ள நீர் வற்றியப் பின்னர் தென்பட்ட மனித உடல்கள் என குறிப்பிட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.

    எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் தண்ணீர் வற்றிய பின்னர் உடல்கள் நேபாளம் என தெரிவிக்கப்பட்டு இந்த காணொளியானது 2026.09.01 ஆம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

    மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் இந்த காணொளியை நன்கு ஆராய்ந்த போது இறந்தவர்களைப் போல சிலப் பெண்கள் நீர் நிலைகளில் படுத்திருப்பதனை காணமுடிகின்றது. ஆனால் அவர்கனை பார்க்கும் போது சில இயற்கைக்கு மாறான அம்சங்களை எமக்கு அவதானிக்க முடிந்தது. அதாவது உண்மையில் வெள்ள நீரில் மூழ்கி இறந்தவர்களின் காட்சியை விட இது முற்றிலும் மாறுப்பட்டதாகவே காணப்பட்டது.

    உண்மையில் நோபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் காட்சியை இந்த காணொளி காட்டுவதாக இருப்பின் அது குறித்து சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும். ஆனால் நாம் மேற்கொண்ட ஆய்வில் இந்த காணொளியானது சர்வதேச ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதனை அறியமுடிந்தது.

    ஆகவே நாம் இந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது 2026 ஜூலை 3ஆம் திகதி Instagram கணக்கில் இந்த காணொளி பதிவிடப்பட்டிருந்தது. 

    ஆகவே  நேபாளத்தில் 2026.08.26 ஆம் திகதியே வெள்ளம் ஏற்பட்டது ஆனால் இந்த காணொளியானது ஜுலை மாதமே இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது, அதனடிப்படையில் பார்க்கும் போது இந்த காணொளி நேபாள வெள்ளத்துடன் தொடர்புடையதல்ல என்பது தெளிவாகின்றது.

    எனினும் நாம் இந்த காணொளி தொடர்பில் தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்ட போது, குறித்த இன்ஸ்டகிராம் கணக்கில்  இதேபோன்று பெண்கள் நீர்நிலைகளிலும் அவற்றின் அருகிலும் இறந்தவர்களைப் போன்று படுத்திருக்கும் பல காணொளிகள் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளது.

    அந்தக் கணக்கில் நண்பர்களுக்கிடையிலான விளையாட்டுகள் மற்றும் குறும்புகள் தொடர்பான காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

    மேலும், 2026 ஆகஸ்ட் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட மற்றொரு காணொளியில், இந்தக் காணொளிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதைக் காட்டும் பின்னணிக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    அந்தக் காட்சிகளில் சில பெண்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதையும், சிலர் இறந்தவர்களைப் போன்று தங்களது நிலையை மாற்றாமல் படுத்திருப்பதையும் காண முடிகிறது.

    ஒரு பெண், மற்றொரு பெண் நீரில் படுத்திருக்கும் நிலையில், அவரது தலைமுடியை சரிசெய்து கொண்டிருப்பதையும் காணலாம். இது அந்தக் காணொளி திட்டமிட்டு உருவாக்கப்பட்டதற்கான முக்கிய ஆதாரமாகும்.

    மேலும் இந்த காணொளி முதலில் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்துடன் தொடர்புபடுத்தி தவறாகப் பகிரப்பட்டபோது, இந்தியாவின் உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமொன்று, 2026 ஜூலை 30ஆம் திகதி இதனை ஆய்வு செய்து, இந்த காணொளியானது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட காணொளி என்பதனை உறுதி செய்து அறிக்கையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நேபாளத்தில் வெள்ள நீர் வற்றிய பின்னர் தென்பட்ட உடல்கள் என பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன், அது நேபாள பேரழிவிற்கு முன்னரே திட்டமிட்டு உருவாக்கப்பட்டு கடந்த 2026 ஜூலை 03 ஆம் திகதி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: நேபாளத்தில் வெள்ள நீர் வற்றிய பின்னர் தென்பட்ட உடல்களை காட்டு காணொளியா இது?

    Fact Check By: Suji Shabeedharan

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-03

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.