Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    திபெத்தில் மேகக் கூட்டம் தரையிறங்கியதாக பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-11-12
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    தினமும்உண்மையான தகவலை தெரிந்து கொள்ள எமது  WhatsApp குழுவில் இணைந்திடுங்கள் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is th

    தினமும்உண்மையான தகவலை தெரிந்து கொள்ள எமது  WhatsApp குழுவில் இணைந்திடுங்கள்

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” 👆திபெத் நாட்டில் மேகம் தரையில் இறங்கியுள்ளது. அந்த அழகிய அதிசயத்தை காணுங்கள் “ என கடந்த மாதம் 25 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (25.10.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த வீடியோவை நன்கு அவதானிக்கும் போது, இது மேகக்கூட்டம் அல்ல என்பதோடு, எதோ புகைமூட்டம் போன்று இருப்பதை காணக்கிடைத்தது.

    இதனை தொடர்ந்து, குறித்த வீடியோவில் சில ஸ்கீரின் ஷாட் எடுத்து அதனை அவதானித்த போது, மேகங்கள் தரையிறங்கியமைக்கான தடயங்கள் இருப்பதாக எம்மால் காணமுடியவில்லை. இது சிலவேலை மணல் புயலாக இருக்க வாய்ப்புள்ளது என்ற கோணத்தில் நாம் சில மணற் புயல் ஏற்பட்ட வீடியோக்களை இதனுடன் ஒப்பிட்டு பார்வையிட்டோம்.

    dailystar.co.uk | Archived link

    குறித்த தேடலின் போது, மணற்புயலுடன் குறித்த வீடியோவும் ஒத்து போனது எம்மால் காணக்கிடைத்தது.

    இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வின் போது, இதுபற்றி ABP News வெளியிட்ட செய்தி ஒன்றை காணக்கிடைத்தது. அதில், ‘’இது மேகக்கூட்டம் இல்லை, இது ஒரு மணற்புயல் என்று வானிலை ஆராய்ச்சியாளர் மகேஷ் பலாவட் என்பவரிடம் பேசி தெளிவுபடுத்தப்பட்டது,’’ எனக் குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது. எனினும், எங்கே நிகழ்ந்தது என்ற விவரம் கூறப்படவில்லை.

    ABP News Live Link  

    மேலும் வட இந்திய மாநிலங்கள், சீனா, மங்கோலியா, அரபு நாடுகள் போன்ற மத்திய கிழக்காசிய பிராந்தியம், ஆப்ரிக்க நாடுகள், அமெரிக்கா என உலகத்தில் பல இடங்களில், இதுபோன்ற மணற்புயல் ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வுதான். அப்படி ஒரு இடத்தில் நிகழ்ந்த மணற்புயல் நிகழ்வை எடுத்து, மேகம் தரையில் தவழ்ந்த அரிய காட்சி என வதந்தி பரப்பியுள்ளனர்.   

    இதற்கமைய திபெத்தில் மேகக் கூட்டம் தரையிறங்கியதாக பரவும் வீடியோ போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok


    எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:திபெத்தில் மேகக் கூட்டம் தரையிறங்கியதாக பரவும் வீடியோ உண்மையா?

    Fact Check By:  S.G.Prabu  

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-11-12

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.