Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    தலைமன்னார் புகையிர பாதை அபிவிருத்தி என பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-02-16
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :தலைமன்னார் புகையிரத போக்குவரத்து சேவையினை சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அதி நவீன முறையில் அபிவிருத்தி என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட

    INTRO :
    தலைமன்னார் புகையிரத போக்குவரத்து சேவையினை சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அதி நவீன முறையில் அபிவிருத்தி என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” 

    *தலைமன்னார் இரயில் போக்குவரத்து சேவை சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அதி நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

    *Udunuwara news 🖊️* “ என இம் மாதம் 05 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (05.02.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது. 

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த தேடலின் போது, 马国新闻 Malanews என்ற பேஸ்புக் பக்கத்தில் சீன மொழியில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது. அதை நாம் Google Translation  பயன்படுத்தி மொழிபெயர்த்த போது ” சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்வே ரோலிங் இயந்திரம், மலேசியா கிழக்கு கடற்கரை இரயில் திட்டத்தில், “ என காணக்கிடைத்தது.

    மேலும் நாம் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, x (twitter) தளத்தில் பதிவிட்டிருந்த பதிவொன்றும் எமக்கு காணக்கிடைத்தது. அதிலும் மலேசியா கிழக்கு கடற்கரை இரயில் திட்டம் ஆரம்பம் என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    X | Archieved 

    நாம் மலேசியா கிழக்கு கடற்கரை இரயில் திட்டம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, Global Times இணையத்தில் வெளியாகியிருந்த செய்தி காணக்கிடைத்தது. குறித்த செய்தியில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி அன்று மலேசியா கிழக்கு கடற்கரை இரயில் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், தலைமன்னார் புகையிர பாதை அபிவிருத்தி என பகிரப்படும் வீடியோ மலேசியா கிழக்கு கடற்கரை இரயில் திட்டத்தின் காட்சி என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:தலைமன்னார் புகையிர பாதை அபிவிருத்தி என பரவும் வீடியோ உண்மையா?

    Written By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-02-16

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.