Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    மாணிக்க கங்கை பெருக்கெடுத்த காட்சியா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-08-05
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் பின்னணியில் பல்வேறு காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தத

    Subscribe to our WhatsApp Channel


    INTRO :

    நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் பின்னணியில் பல்வேறு காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. அந்தவகையில் கடும் மழைக் காரணமாக மாணிக்க கங்கை பெருக்கெடுத்த காட்சி என ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

    எனவே அந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    குறித்த பதிவில் மாணிக்க கங்கை பெருக்கெடுத்த காட்சி கோயிலையும் விட்டு வைக்காத காட்டாற்று வெள்ளம் என தெரிவிக்கப்பட்டு நேற்று (2026.08.04) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.


    Fact Check (உண்மை அறிவோம்)

    கடந்த தினங்களில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் மாணிக்க கங்கை பெருக்கெடுத்ததாக தெரிவிக்கப்படும் இந்த காணொளி குறித்த செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது, சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட பல்வேறு காட்சிகளுடனான செய்திகளை எம்மால் காணமுடிந்தது. ஆனால் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் அந்த காணொளி குறித்த செய்திகளில் வெளியாகவில்லை என்பதனை அறியமுடிந்தது.

    ஆகவே நாம் இந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம். இதன்போது, கடந்த 2026.07.08 ஆம் திகதி மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் முல்ஷி தாலுகாவில் உள்ள கோதவாடே பகுதியில் பெய்த கனமழையால், புகழ்பெற்ற வர்தாயினி தேவி கோவில் வெள்ளத்தில் மூழ்கியது என தெரிவித்து இந்த காணொளி  NEWS9 என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

    எனவே நாம் அது குறித்து தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்ட போது, இந்திய சமூக ஊடக கணக்குகளிலும் கடந்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் முல்ஷி தாலுகாவில் உள்ள கோதவாடே பகுதியில் பெய்த கனமழையால், புகழ்பெற்ற வர்தாயினி தேவி கோவில் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரவித்து இந்த காணொளியை பதிவேற்றம் செய்திருந்தமையை காணமுடிந்தது.Link | Link

    மேற்குறிப்பிட்ட காணொளி இலங்கையின் மாணிக்க கங்கை பெருக்கெடுத்த போது எடுக்கப்பட்டதாகவே பகிரப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் தற்போது நிலவிவரும் இந்தத் தீவிர சீரற்ற காலநிலை மற்றும் தொடர் மழை நிலைமையானது ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் (ஆகஸ்ட் 2 முதல் 3 ஆம் திகதிகளில்) தென்மேற்கு பருவக்காற்றின்  தீவிரமடைதலுடன் உருவானது. ஆனால் சமூக ஊடகங்களில் இந்த காணொளியானது கடந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே (8 மற்றும் 9ஆம் திகதி)  பகிரப்பட்டுள்ளது.அதனடிப்படையில் பார்க்கும் போது இந்த காணொளியானது இலங்கையில் ஏற்பட்ட இயற்றை சீற்றத்துடன் தொடர்புடைய காணொளி அல்ல என்பது தெளிவாகின்றது.

    அதிக மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் மாணிக்க கங்கை பெருக்கெடுக்கும் போது செல்லக் கதிர்காமம் ஆலயத்திற்குள் நீர் உட்புகும் செய்திகளை நாம் அறிந்திருப்போம். அந்தனடிப்படையிலேயே இந்த காணொளியும் மாணிக்க கங்கை பெருக்கெடுத்த சந்தரப்பத்தின் காணொளி என பகிரப்படுவதற்கான காரணமாக அமையலாம்.

    பிராந்திய ஊடகவியலாளர்கள்

    ஆகவே நாம் இந்த காணொளி மாணிக்க கங்கை பெருக்கெடுத்த போது எடுக்கப்பட்ட காணொளியா என்பதனை அறிய பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு வினவியிருந்தோம். இதன்போது மேற்குறிப்பிட்ட காணொளி மாணிக்க கங்கை பெருக்கெடுத்த போது எடுக்கப்பட்ட காணொளி அல்ல என்பதனை அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர். எவ்வாறாயினும் மாணிக்க கங்கையின் நீர் மட்டம் உயரும் போது செல்லக் கதிர்காமம் ஆலயத்திற்குள் நீர் உட்புகுவது வழமையான ஒரு நிகழ்வு எனவும் இம்முறையும் அவ்வாறு நீர் உட்புகுந்ததாகவும் அந்த கோயில் ஆற்றுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருப்பதனால் மற்றைய வருடங்களை போன்று இம்முறையும் ஆறு பெருக்கெடுத்த சந்தர்ப்பத்தில் கோயிலுக்குள் நீர் உட்புகுந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் குறித்த காணொளி மாணிக்க கங்கை பெருக்கெடுத்து கோயிலுக்குள் நீர்புகும் காணொளி அல்ல எனவும் தெரிவித்தனர்.

    மேலும் இலங்கையில் இருக்கும் செல்லக் கதிர்காமம் கோயிலின் அமைப்பு மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வர்தாயினி தேவி கோயிலின் அமைப்பு இரண்டையும் நாம் ஆராய்ந்தில் அந்த இரு கோயில்களின் அமைப்பிலும் பாரிய வேறுபாடுகள் இருப்பதனை காணமுடிந்தது. 

    மேற்குறிப்பிட்ட வேறுபாடுகளின் ஊடாக பார்க்கும் போது மாணிக்க கங்கை பெருக்கெடுத்ததாக தெரிவித்து கோயிலின் மேல் நீர் பாய்வதாக பகிரப்படும் காணொளியில்  இருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வர்தாயினி தேவி கோயில் என்பது தெளிவாகின்றது.

    சீரற்ற காலநிலை காரணமாக கடந்த தினங்களில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம்

    கடந்த தினங்களில் நாட்டில் நிலவிய திடீர் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 08 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (04) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்து.

    மேலும், இந்த அனர்த்தங்களினால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 56 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அத்துடன், 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த அனர்த்தங்களால் 3 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முழுமையாகவும் 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.Link

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….


    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube


    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கடந்த தினங்களில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பெருக்கெடுத்த மாணிக்க கங்கை கோயிலையும் விட்டு வைக்கவில்லை என தெரிவித்து பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன் இந்த காணொளியானது கடந்த ஜுலை மாதம் பெய்த கடும் மழை காரணமாக இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வர்தாயினி தேவி கோயில் வெள்ளத்தில் மூழ்கிய போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது. 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: மாணிக்க கங்கை பெருக்கெடுத்த காட்சியா இது?

    Written By: Suji Shabeedharan

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-08-05

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.