Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன் எடுத்த வீடியோ இதுவா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-11-04
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன்னர் நோயினால் அவதிப்பட்டார் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தக

    INTRO :

    இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன்னர் நோயினால் அவதிப்பட்டார் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “🇮🇱இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்ட படுக்கையில் இருந்தார்.கலிமா சொன்ன பாலஸ்தீனிய குழந்தைகளை பள்ளியில் கொன்று ,அந்த  குண்டுவெடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய பாலஸ்தீன பெண்களை இஸ்ரேலிய ஏரியல் ஷரோன் கேலி செய்தான். ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பாலஸ்தீனியர்கள் இப்போது புழுக்களின் உணவாகிவிட்டார்கள் என்று ஏரியல் ஷரோன் ஆணவத்துடன் இழிவாக கூறினான்

    இன்று ஏரியல் ஷரோனை அவன் இறப்பதற்கு முன் புழுக்களின் உணவாக மாற்றினான்  இழிவாக்கினான் இறைவன்

    அவரின் கண்களில் இருந்தும், காதில் இருந்தும் புழுக்கள்‌ வெளியேற செய்தான்…

    அல்லாஹு அக்பர் “ என இம் மாதம் 01 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (01.11.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    நாம் முதலில் குறித்த வீடியோவை புகைப்படமாக மாற்றி அந்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, Passion of lyf என்ற யூடியூப் சேனலில் குறித்த வீடியோ பதிவு எமக்கு காணக்கிடைத்தது.

    மேலும் நாம் தொடர்ந்து மேற்கொண்ட தேடலின் போது, குறித்த வீடியோவில் உள்ளவர் பாகிஸ்தான் நாட்டின் DSP Anwar Sandal என கண்டறியப்பட்டது. 

    Link 1 | Link 2 | Link 3 

    தொடர்ந்து நாம் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, அவர் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளதோடு, அவர் 8 வருடங்களுக்கு மேல் கோமாவில் இருந்து வந்தநிலையில் சிறுநீரகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான உடல் உறுப்புகள் செயலிழந்துபோயிருந்த நிலையில் மரணித்துள்ளார் என ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.

     bbc.com

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன்னர் என பகிரப்படும் வீடியோ தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன் எடுத்த வீடியோ இதுவா?

    Written By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-11-04

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.