Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ஹமாஸ் படையினரின் சடலங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-10-20
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : உயிரிழந்த நூற்றுக்கணக்கான ஹமாஸ் படையினரின் உடல்கள் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண

    INTRO :

    உயிரிழந்த நூற்றுக்கணக்கான ஹமாஸ் படையினரின் உடல்கள் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “அனைத்து போராளிகளையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக ஆமீன்🤲🇦🇪 “ என இம் மாதம் 18 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (18.10.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)
    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    நாம் முதலில் குறித்த வீடியோவை புகைப்படமாக மாற்றி அந்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, x (டுவிட்டர்) சமூகவலைத்தளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி குறித்த காணொலி பதிவிடப்பட்டிருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.

    Archived Link

    மேலும் நாம் குறித்த் x பதிவிலிருந்து சில வார்த்தைகளை கொண்டு கூகுளில் தேடிய போது, Balitribune என்ற இந்தோனேசிய ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “இந்தோனேசிய இளைஞர் தேசியக் கமிட்டி மற்றும் இரு அமைப்புக்கள் இணைந்து கோலோ நரங்(Calonarang) எனப்படும் இந்தோனேசிய நாட்டுப்புறவியல் நிகழ்வை நடத்தி உள்ளனர். இந்த நிகழ்வில் 108 பேர் பங்கேற்று இறந்தவர்களைப் போன்று நடித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி கெடுட் மரியா கலைக் கட்டிடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது” என்று கூறப்பட்டுள்ளது.

    balitribune Link | Archived Link

    மேலும், மேற்கொண்ட தேடலின் போது Bali Klasik Channel New என்ற யூடியூப் அலைவரிசையில் குறித்த நிகழ்வின் காணொளி வெளியிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி உயிரிழந்த நூற்றுக்கணக்கான ஹமாஸ் படையினரின் உடல்கள் என பகிரப்படும் வீடியோ தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஹமாஸ் படையினரின் சடலங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா ?

    Written By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-10-20

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.