
INTRO :
பற்றியெரியும் இஸ்ரேலிய தலைநகரம் டெல் அவிவ் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “பற்றியெரியும் இஸ்ரேலிய தலைநகரம் டெல் அவிவ்.. #Israel “ என இம் மாதம் 11 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (11.10.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது,
நாம் முதலில் குறித்த வீடியோவை புகைப்படமாக மாற்றி அந்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, அல்ஜீரியா நாட்டில் கால் பந்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய காட்சி என கண்டறியப்பட்டது.
மேலும் நாம் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் போது, Ultras Fanatic Reds என்ற யூடியுப் அலைவரிசையில் CRBelouizdad கால்பந்து கழகத்தின் 61ஆவது ஆண்டுவிழா மற்றும் 10th Algerian championship என்று பதிவிட்டு குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/1LEpwmfivis?si=hCaR0mizuC6fGDqv” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” allowfullscreen></iframe>
நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி பற்றியெரியும் இஸ்ரேலிய தலைநகரம் டெல் அவிவ் என பகிரப்படும் வீடியோ தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:பற்றியெரியும் இஸ்ரேலிய தலைநகரம் டெல் அவிவ் என பரவும் வீடியோ உண்மையா ?
Written By: S.G.PrabuResult: False



