Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஐசிசி 2022 இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடருக்கான அறிவித்த சிறந்த அணியா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-11-18
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    தினமும்உண்மையான தகவலை தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணைந்திடுங்கள் INTRO :நடந்து முடிந்த இருபதுக்கு20 உலகக்கிண்ணத்திற்கான ஐசிசி அறிவித்த சிறந்த அணி என 11 பேர் கொண்ட அணியின் புகைப்படம்  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குற

    தினமும்உண்மையான தகவலை தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணைந்திடுங்கள்

    INTRO :
    நடந்து முடிந்த இருபதுக்கு20 உலகக்கிண்ணத்திற்கான ஐசிசி அறிவித்த சிறந்த அணி என 11 பேர் கொண்ட அணியின் புகைப்படம்  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.


    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த அணியை அறிவித்தது ஐசிசி!  “ என இம் மாதம் 14 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (14.11.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் குறித்த புகைப்படத்தினை அவதானித்த போது, ஐசிசி இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடரின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்ட சாம் கரன் குறித்த பட்டியலில் இல்லாமையினால் இது தொடர்பாக எமக்கு சந்தேகம் எழ ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.

    அதனடிப்படையில், ஐசிசி நிறுவனத்தின் உத்தியோக்கபூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை நாம் ஆய்வு செய்தோம். அதில் சிறந்த அணி என 12 பேர் கொண்ட அணியினை ஐசிசி அறிவித்திருந்தமை காணக்கிடைத்தது.

    அதில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் இடம்பெறவில்லை மாறாக எட்டாவது வீரராக சாம் கரன் மற்றும் பன்னிரண்டாவது வீரராக ஹர்த்திக் பாண்டிய இடம்பெற்றிருந்தமை எமது ஆய்வின் மூலம் தெரியவந்தது.

    மேலும் இதனை நாம் உறுதி செய்துக்கொள்ள ஐசிசி இணையத்தளத்தில் இது தொடர்பாக தேடியபோதும் கிடைத்த செய்திகளில் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இடம்பெற்று இருக்கவில்லை என்பது உறுதியானது.

    Link 1 | Link 2

    இணையத்தில் தற்போது பகிரப்பட்ட புகைப்படம்  தொடர்பாக நாம் மேலும் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, சில டுவிட்டர் பதிவுகளில் குறித்த Star Sports நேரலையின் போது பகிரப்பட்டிருந்ததாக சில பதிவுகள் எம்மால் காணக்கிடைத்தது.

    Twitter  | Archived Link

    Twitter  | Archived link

    நாம் அவர்களின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, எம்மால் குறித்த புகைப்படத்தினை அவர்களின் டுவிட் பதிவுகளில் காண முடியவில்லை.

    இதற்கமைய ஐசிசி 2022 இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடருக்கான அறிவித்த சிறந்த அணி என பகிரப்படும் குறித்த புகைப்படம் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok


    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஐசிசி 2022 இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடருக்கான அறிவித்த சிறந்த அணியா இது?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Missing Context

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-11-18

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.