Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    குமார் சங்கக்காரவின் மனைவி என பகிரப்படும் புகைப்படம் உண்மையா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-01-11
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்காரவின் மனைவி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல்

    INTRO :
    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்காரவின் மனைவி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா

     மற்றும் அவரது மனைவியின் அழகான

     புகைப்படம் “ என இம் மாதம் 09 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (09.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் இந்த பதிவினை ஆய்வு செய்த போது, பலர் குறித்த புகைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வந்துள்ளமை காணக்கிடைத்தது. 

    குமார் சங்கக்காரவின் மனைவி யெஹாலி சங்கக்கார ஆவார். அவரின் புகைப்படத்தினை நாம் ஒப்பிட்டு பார்த்த போது இதில் இருக்கும் பெண் வேறொரு பெண் என கண்டறியப்பட்டது.

    gettyimages.ca

    மேலும் நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த புகைப்படத்தில் இருக்கும் பெண் ஷிம்னா சந்தன் (Shimna Chandan) எனவும் Tambapanni Collective என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எனவும் கண்டறியப்பட்டது. இது குறித்து குமார் சங்கக்கார அவரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் இட்ட பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    instagram.com

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், குமார் சங்கக்காரவின் மனைவி என பகிரப்படும் புகைப்படம் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:குமார் சங்கக்காரவின் மனைவி என பகிரப்படும் புகைப்படம் உண்மையா ?

    Written By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-01-11

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.