
INTRO:
28 நாட்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தொடர்ந்து எடுக்கப்பட்ட வளர்பிறை நிலவின் காட்சி என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “ ஒரே இடத்தில் ஓரே நேரத்தில் 28, நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட வளர்பிறை நிலவின் அழகிய காட்சி ”இம் மாதம் 05 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (05.12.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது, 2018 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி fineartamerica.com என்ற இணையதளத்தில் இந்த புகைப்படத்தை Giorgia Hofer என்பவர் பதிவேற்றம் செய்திருந்தமை காணக்கிடைத்தது.
நாம் தொடர்ந்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தேடி எடுத்தோம். 2018 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் திகதி இந்த புகைப்படத்தை அவர் பதிவேற்றம் செய்திருந்தார். இத்தாலியன் மொழியில் அவர் பதிவிட்டிருந்த பதிவை நாம் மொழிபெயர்ப்பு செய்தவேளையில், “வானியல் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் (மென்பொருள்) கொண்டு ஒவ்வொரு 1481 நிமிடங்களுக்கும் (24 மணி நேரம் 41 நிமிடம்) சந்திரன் இருக்கும் நிலையை 27 நாட்கள் கணக்கிட்டேன். சந்திரனைத் தொடர்ந்து எல்லா நாளும் புகைப்படம் எடுக்க முடியாது. ஏனெனில் என் நாட்டில் வானிலை அதற்கு சாதகமாக இருக்காது. 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி, ஜூலை, டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நிலவைப் படம்பிடித்தேன். இதற்காக 400 மில்லிமீட்டர் டெலிஃபோட்டோ லென்சை பயன்படுத்தினேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
முழு நிலவு முதல் அமாவாசை பிறகு அமாவாசையிலிருந்து முழு நிலவு வரையிலான 28 நாட்கள் நிலவின் புகைப்படம் தான் இது. ஆனால், தொடர்ந்து 28 நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது இல்லை என்பது தெளிவாகிறது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், 28 நாட்கள் ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் வளர்பிறை புகைப்படம் என பகிரப்படும் தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:28 நாட்கள் ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் வளர்பிறை புகைப்படம் உண்மையா?
Fact Check By: S.G.PrabuResult: Misleading



