Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கல் விழா என பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-02-03
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கல் விழா என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம

    INTRO :
    யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கல் விழா என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” யாழ்ப்பாண பல்கலைகழகம் “ என கடந்த மாதம் 22 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (22.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த வீடியோவை நன்கு அவதானித்த போது, அதில் SLIIT தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் பொறிக்கப்பட்டுள்ள சின்னத்தினை  கண்டறிய முடிந்தது. 

    மேலும் நாம் SLIIT தனியார் பல்கலைக்கழகத்தின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தினை ஆய்வு செய்த போது, கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற பொங்கல் விழாவின் புகைப்படங்கள் காணக்கிடைத்தன.

    குறித்த புகைப்படங்களும் இணையத்தில் யாழ் பல்கலைக்கழகம் என பகிரப்படும் வீடியோவில் உள்ள காட்சிகளும் ஒன்றாக இருக்கின்றமை காணக்கிடைத்தது.

    எனவே, நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கல் விழா என பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கல் விழா என பரவும் வீடியோ உண்மையா?

    Written By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-02-03

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.