Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என பரவும் தகவல் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-11-25
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO:  ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவன


    INTRO:  
    ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link  | Archived Link 

    சமூக வலைத்தளங்களில் “ஜனாதிபதி அனுரட பிறந்த நாள் கொண்டாட்டம் 

    இலங்கையில் இடம்பெற்ற ஸ்வீடனின் பிரபல இசைக்குழுவின் நிகழ்வில் பிரதமர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்

    மவுண்ட் லாவினியா ஹோட்டலில் ABBA: ARRIVAL from Sweden இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ABBA இசை குழு  ஸ்வீடனில் இருந்து வந்தது.  இந்த நிகழ்வானது ஸ்வீடிஷ் பாப் குழுவின்  பாடல்களை மேடையில் பாடியது.”இம் மாதம் 24 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (24.11.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது குறித்தான ஆய்வினை மேற்கொண்டபோது , நாம் ஜனாதிபதி ஊடகப்பிரிவினை தொடர்புக்கொண்டு வினவியபோது, இது ஜனாதிபதி பிறந்தநாள் கொண்டாட்டம் அல்ல என எமக்கு உறுதி செய்தனர்.

    மேலும் இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி சமூகமளிக்கவில்லை எனவும்,பிரதம் மற்றும் வெளிவிவகார அமைச்சர் குறித்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் எமக்கு தெரியப்படுத்தினர்.

    இது தொடர்பாக நாம் மேலும் ஆய்வினை மேற்கொண்டபோது, இலங்கையில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கை ஊக்குவிக்கும் முகமாக குறித்த நிகழ்வினை Mount Lavinia Hotel ஏற்படுத்தியிருந்தமை அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    மேலும் குறித்த நிகழ்வு 23 ஆம் திகதி அன்று (23.11.2024) தான் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    நாம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின்  உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தினைஆய்வு செய்தபோது, இது ஜனாதிபதி பிறந்தநாளுக்காக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு இல்லை என்பது உறுதி செய்ய முடிந்தது.

    மேலும் ஜனாதிபதி தனது பிறந்தநாள் அன்று ஆயுதப்படையின் நினைவு தினத்தில் கலந்துக்கொண்டிருந்த புகைப்படங்களை அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என பகிரப்படும் தகவல் தவறானது என்று  கண்டறியப்பட்டது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என பரவும் தகவல் உண்மையா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-11-25

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.