Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்த காட்சியா இது ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-11-30
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்த காட்சி  என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் க

    INTRO :
    இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்த காட்சி  என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்த காட்சி மொபைல் இருட்டியபின் 15 வினாடி காத்திருக்கவும்.

    😢😢🤲🏻 “ என இம் மாதம் 23 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (23.11.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.


    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த வீடியோவில் நன்கு அவதானித்த போது, இது உண்மையாக எடுக்கப்பட்ட வீடியோவா என எமக்கு சந்தேகம் எழுந்தது.

    குறித்த வீடியோவில் காட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் சூழல் வடிவமைக்கப்பட்டிருந்தமை போன்று எமக்கு சந்தேகம் எழ, அந்த வீடியோவில் இருந்து எடுத்த சில ஸ்கீரின் ஷாட்டினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, dailymail என்ற இணைய செய்தி தளத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றது.

    அதில் நியூசிலாந்தில் உள்ள விக்டோரியா பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் கோலின் வில்சன் ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வீடியோ என செய்தி வெளியிடப்பட்டது.

    குறித்த வீடியோ  Auckland Museum இற்காக கடலுக்கடியில் எரிமலை வெடித்தால் நகரத்திற்கு ஏற்படும் பேரழிவைக் காட்டுவதற்காக  தயாரிக்கப்பட்டுள்ளது. newshub

    இதற்கமைய இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்த காட்சி பரவி வருகின்ற குறித்த வீடியோ போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவு மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்த காட்சியா இது ?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-11-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.