Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா என பரவும் புகைப்படம் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-12-25
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிர

    INTRO :

    ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “ ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா(Photos)

    Nuwara Eliya Sri Lanka

    இலங்கையின் நுவரெலியாவில் பல பகுதிகளில் நேற்றைய தினம் (21.12.2023) அதிகாலை பூ பனி பெய்துள்ளது.

    நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் பூ பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பூ பனி பொழிவு காணப்பட்டது.

    இலங்கை சென்ற அமெரிக்க தமிழர் அமைப்பின் பிரதிநிதி அதிரடி இடைநீக்கம்

    மேலும் இன்று அதிகாலை நுவரெலியாவின் வெப்ப நிலை 14 பாகை செல்சியஸாக காணப்பட்டதால் அதிகம் குளிரான நிலையை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

    இதேவேளை பூ பனி பொழிவால் நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகள் ஐரோப்பாவை போல் காட்சியளிக்கின்றது. “ என இம் மாதம் 21 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (21.12.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)


    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, முதலில் நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரதேசத்தில் இதுபோன்று பனிப்பொழிவு இடம்பெற்றதாக பிரதான ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கவில்லை.

    மேலும் இது தொடர்பாக நாம் குறித்த பிரதேசத்தில் வசிப்பவர்களை நாம் தொடர்பு கொண்டு வினவியபோது, இவ்வாறான சம்பவங்கள் எதுவும் அங்கு பதிவாகவில்லை என தெரிவித்தனர். 

    குறித்த பிரதேச ஊடகவியலாளர்களை நாம் தொடர்புக்கொண்டு வினவியபோதும் அவர்களும் குறித்த சம்பவம் இடம்பெறவில்லை என எமக்கு உறுதிப்படுத்தினர்.

    இது தொடர்பாக நாம் வளிமண்டல ஆராய்ச்சித் திணைக்களத்திடம் வினவியபோது, நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரதேசங்களில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரமே பனிப்பொழிவு இருக்கும் எனவும், நேற்று மற்றும் அதற்கு முந்தைய நாளில் இவ்வாறான எவ்விதமான பதிவும் இடம்பெறவில்லை என உறுதிசெய்தனர்.

    குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது 2022 ஆம் ஆண்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் இது பல வருடங்களுக்கு முன்னர் Fuding எனும் பிரதேசத்தில் தேயிலை தோட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Link 

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா என பகிரப்படும் தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா என பரவும் புகைப்படம் உண்மையா?

    Written By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-12-25

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.