Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    டி20 உலகக்கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட இலங்கை அணியா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-05-29
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இவ்வருடம் இடம்பெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட இலங்கை அணி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல

    INTRO :
    இவ்வருடம் இடம்பெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட இலங்கை அணி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ இலங்கை இருபதுக்கு20 அணி

    “ என இம் மாதம் 09 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (09.05.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக, உண்மைத்தன்மையினை கண்டறிய இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக பேச்சாளரை தொடர்புகொண்டு நாம் வினவியபோது, இது முற்றிலும் போலியான தகவல், என்று உறுதி செய்தார்.

    மேலும், நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, டி20 உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ அணி தொடர்பான தகவல்களும் கிடைக்கப்பெற்றது. 

    Link 1 | Link 2  

    அதில் வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட இலங்கை அணி என பரவிய தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:டி20 உலகக்கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட இலங்கை அணியா இது?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-05-29

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.