Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    செங்கடலில் மோசே உருவாக்கிய பாதையா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-01-30
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :‘செங்கடலில் மோசே கடலினை பிரித்து உருவாக்கிய பாதை,’ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்

    INTRO :
    ‘செங்கடலில் மோசே கடலினை பிரித்து உருவாக்கிய பாதை,’ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” இது செங்கடலில் உள்ள இடம், அங்கு மோசே (ஹஸ்ரத் மூசா) தனது மக்களுக்காக பார்வோன், ராம்சேஸ் படையில் இருந்து தப்பிக்க ஒரு பாதையை உருவாக்கினார்.  வருடத்திற்கு இருமுறை தோன்றி மறைந்துவிடும். “ என இம் மாதம் 20 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (20.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம். அப்போது, x தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், ‘’இது சீனாவில் அமைந்துள்ள டோங்ஷான் தீவு,’’ என்று பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    twitter.com

    மேலும் நாம் மேற்கொண்ட ஆய்வில், Douyin சமூக வலைத்தள கணக்கில் சீன மொழியில் பதிவிட்ட பதிவில் ”மாலைத்தீவா?, இல்லை, இது விஸ்போன் சான்ட்பார் Dongshan Island, Fujian. Dongshan Island அவர்களை கூட்டி வாருங்கள்” என்று கூறப்பட்டிருந்தது. 

    douyin.com

    குறித்த கணக்கினை நாம் ஆய்வு செய்த போது, இதுபோன்ற பல வீடியோக்கள் காணக்கிடைத்தன. 

    மேலும் குறித்த keyword பயன்படுத்தி ஆய்வுசெய்த போது, China Plus Culture என்ற பேஸ்புக் பக்கத்தில் இதே வீடியோ பதிவு இடம்பெற்றுள்ளதையும் கண்டோம்.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் செங்கடலில் மோசே கடலினை பிரித்து உருவாக்கிய பாதை என பகிரப்படும் வீடியோ தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:செங்கடலில் மோசே உருவாக்கிய பாதையா இது?

    Written By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-01-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.