Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    <strong>நேபாள விமான விபத்து என பகிரப்படும் வீடியோ உண்மையா?</strong>

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-01-27
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :சமீபத்தில் நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்துடன் தொடர்புடையது என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃப

    INTRO :
    சமீபத்தில் நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்துடன் தொடர்புடையது என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” நேபாள விமான விபத்தின் கடைசி நிமிடங்கள்- வெளியான அதிர்ச்சிக் *நேபாள விமான விபத்தின் கடைசி நிமிடங்கள்- வெளியான அதிர்ச்சிக் காணொளி* “ என இம் மாதம் 16 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (16.01.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த வீடியோவை நன்கு அவதானித்த போது, 55 செக்கன்களில் இருந்து 2 நிமிடங்கள் 11 செக்கன்கள் வரையான வீடியோ நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்துடன் தொடர்புடையது அல்ல என சந்தேகம் எழுந்தது.

    ஆகவே வீடியோவை ஸ்கிரின் ஷாட் எடுத்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி  Anadolu Agency  யூடியுப் தளத்தில் குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    குறித்த விமான விபத்து ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளதோடு, அதில் 3 பேர் உயிரிழந்தனர் என செய்தி வெளியாகியிருந்தது.

    Breaking Aviation News and Videos என்ற டுவிட்டர் பக்கத்திலும் குறித்த விபத்தின் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    மேலும், சர்வதேச ஊடகங்களும் இது குறித்தான செய்தி வெளியிட்டிருந்தமையும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    AP News | Bostonglobe

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நேபாளத்தில் சமீபத்தில் இடம்பெற்ற விமான விபத்தின் வீடியோ என பகிரப்படும் குறித்த வீடியோ, 2021 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தின் வீடியோ என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நேபாள விமான விபத்து என பகிரப்படும் வீடியோ உண்மையா?

    Fact Check By: S G Prabu 

    Result: Missing Context

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-01-27

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.