INTRO :
இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையம் யேமனின் தாக்குதலால் பாதிப்படைந்துள்ளதாக தெரவித்து ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “இஸ்ரேல் நாட்டில் உள்ள எந்தப் பகுதியும்
இனிமேல் பாதுகாப்பாக இருக்காது என ஏமன் அறிவித்துள்ளது
அவர்கள் நமக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை மட்டும் நாம் பகிர்கிறோம்
நமது பேராளிகள்
அங்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் காட்சிகளை
ஏன் நாம் பகிர்வதில்லை
இது இஸ்ரோல் தலைநகர்
டெல்அவி
விமான நிலையம்
ராக்கெட் தாக்குதல் மூலம் ஏமன் அழித்துவிட்டது “ என கடந்த மாதம் 23 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (23.05.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததை போன்று டெல் அவிவ் விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதா என்பது குறித்து கூகுளில் Keyword Research செய்து பாரத்தபோது, கடந்த மே மாதம் 4 ஆம் திகதி யேமன் நாட்டினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன . nytimes.com | cnn.com
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின் புகைப்படங்களும் குறித்த செய்தியில் வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது. அதனை ஆய்வு செய்தபோது, சமூகவலைத்தளத்தில் வைரலாகும் குறித்த காணொளியில் உள்ள சேதங்கள் போன்று காட்சியளிக்கவில்லை.
ஆகவே குறித்த காணொளியில் உள்ள இன்ஸ்டெகிராம் பயனாளரின் கணக்கினை நாம் ஆய்வு செய்தபோது, இஸ்ரேல் நாட்டில் போர் சேதங்கள் என்று பல காட்சிகள் குறித்த கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
மேலும் குறித்த கணக்கில் விவரிப்பு பகுதியில் “Resisting Artificial Intelligence”
என குறிப்பிட்டப்பட்டுள்ளமை கூகுள் மொழிப்பெயர்ப்பின் மூலம் கண்டறியக்கிடைத்தது.
குறித்த காணொளியில் இஸ்ரேல் விமானம் என தெரிவிக்கப்பட்டுள்ள விமானத்தை நாம் அவதானித்தபோது, உண்மையில் இஸ்ரேலிடம் குறித்த காணொளியில் உள்ள விமானத்தின் ஒட்டப்பட்டுள்ள Stickers இனை போன்று எந்தவிதமான விமானங்களும் எமக்கு அவதானிக்க முடியவில்லை.
மேலும் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி (27.05.2025) Times of Israel செய்தி இணையத்தளத்தில் வெளியாகின செய்தியில் ஹவுத்திகளால் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை, வான் பாதுகாப்புப் படைகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்று இஸ்ரேல் ராணுவம் தெரவித்துள்ளதாகவும், குறித்த தாக்குதலில் பாரியளவில் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. timesofisrael.com
மேலும் இதனை நாம் உறுதி செய்ய DeepFake-O-Meter தளத்தில் மேற்
கொண்ட ஆய்வின் அடிப்படையில், இது செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையம் யேமனின் தாக்குதலால் பாதிப்படைந்துள்ளது என பரவும் காணொளிகள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையம் யேமனின் தாக்குதலால் என பரவும் காணொளி உண்மையா ?
Fact Check By: S.G.PrabuResult: False



